திருமகளின் அருள் கிடைக்க வரலட்சுமி விரதம் நாளில்..பூஜை அறையில் மறக்காமல் கேட்க வேண்டிய 7 சிறந்த பக்தி பாடல்கள்
Varalakshmi Vratham 2022: வரலட்சுமி விரதத்தின் போது இன்று அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானிக்க கேட்க வேண்டிய பக்தி பாடல்களின் தொகுப்பு இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம்.
Varalakshmi Vratham 2022
பெண்கள் மிகவும் உகந்த விரதங்களின் முக்கியமானது இந்த வரலட்சுமி விரதம். இந்த விரதம் ஒவ்வொரு ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில், அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்படக் கூடிய முக்கிய விரதமாகும்.
மேலும் படிக்க...வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள் இதோ!
வரலட்சுமி விரதம்:
அப்படிப்பட்ட வரலட்சுமி விரதம் இந்தாண்டு வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 5ம் தேதி (ஆடி 20) அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போதே பெண்கள் விரதம் மற்றும் பூஜைக்கான பொருட்கள், லட்சுமி தேவி உருவத்தை வைத்து வழிபடுவதற்கான பொருட்களை வாங்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Varalakshmi Vratham 2022
விரதத்தின் பலன்கள்:
வரலட்சுமி நோன்பு என்பது ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, சுமங்கலிப் பெண்கள் நோன்பு இருத்தலாகும். இதனால், திருமண பாக்கியம், இல்லத்தில் செல்வ வளம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது முன்னோர்களின் ஐதீகம்.
மேலும் செய்திகளுக்கு...Thali Peruku: ஆடிப்பெருக்கு நாளில் புதுத் தாலி ஏன் மாற்றப்படுகிறது..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ...
Varalakshmi Vratham 2022
இந்நிலையில் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், 'வரலக்ஷ்மி நமஸ்துப்யம்' க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றி முழுமையாக பாடியிருக்கிறார். எல்லோராலும் இந்த விரதம் நீண்ட நேரம் கடைபிடிக்க முடியவில்லை என்றால், முழு ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
அதன்படி, வரலட்சுமி விரதம் மற்றும் பூஜை மேற்கொள்ளும் தினத்தில் நாம் கேட்க வேண்டிய வரலட்சுமி பூஜைக்கான பாடல்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேலும் படிக்க...Varalakshmi Vratham 2022 : மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி நோம்பு...உருவான கதை
Varalakshmi Vratham 2022
வரலட்சுமி விரதத்தில் கேட்க வேண்டிய பாடல்கள்:
1. ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்.
2. வாசலில் வண்ண கோலங்கள் இட்டு, வாழையும் மாவிலை தோரணம் கட்டி...
3. மகாலட்சுமி போற்றி நித்ய ஸ்ரீ மகாதேவன் பாடல்..
4. நெற்றில் செந்தூர திலகமிட்டு, பசுவை நெய் ஊற்றி திருவிளக்கை ஏற்றிவிடுவோம்.
5. செல்வ வளத்தை அள்ளித்தரும் அஷ்டலட்சுமி கவசம் -பி சுசிலா பாடல்
6. ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ -பி சுசிலா பாடல்
7.ஜெய ஜெய துர்கா தேவி சரணம் --பி சுசிலா பாடல்