ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் உள்ள அந்த சிலை இருக்க கூடாது.. கனல் கண்ணன் பேசியதில் என்ன தவறு.. அண்ணாமலை.

அரசு மேடையில் பேசியது கருத்துச்சுதந்திரம் என்றால் கனல்கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலை உடைக்க வேண்டுமென பைட் மாஸ்டர் கனல்கண்ணன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.


 

Annamalai comments against Periyar statue outside Srirangam temple

அரசு மேடையில் பேசியது கருத்துச்சுதந்திரம் என்றால் கனல்கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம் தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் உள்ள பெரியார் சிலை உடைக்க வேண்டுமென பைட் மாஸ்டர் கனல்கண்ணன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. அதிமுக எதிர்கட்சி என்றாலும் மக்கள் மத்தியில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார், அடிக்கடி ஆளுநரை சந்தித்து அரசுக்கு எதிராக புகார் தெரிவித்து வருகிறார், இது ஒருபுறம் உள்ள நிலையில் இந்து சமய அறநிலைத்துறையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் திராவிடம், பெரியாரின் கருத்துக்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பெரியார் சிலைகள் அவமரியாதை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது.

Annamalai comments against Periyar statue outside Srirangam temple

இந்நிலையில் இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கு நடைபெற்று வந்தது, அதன் நிறைவு விழா சென்னைக்கு அருகே நடந்தது, அதில் பைட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசியவர் இந்துவாக இருப்பது பெருமை தான், ஒரு காலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாடு பிடித்தனர், ஆனால் இப்போது மதத்தை மாற்றி நாட்டை பிடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: இபிஎஸ்யிடம் அதிமுக அலுவலக சாவி...! செக் வைக்கும் ஓபிஎஸ்...உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஸ்ரீரங்கம்  கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தவுடன் அங்கு ஒரு சிலை இருக்கிறது, அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது, நான் சொல்கிறேன் அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என அவர் பேசினார். அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூகத்தில் பாதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கனல் கண்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 

Annamalai comments against Periyar statue outside Srirangam temple

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார், திமுக அரசு மத்திய அரசின் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார், கனல் கண்ணன் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக  மத அரசியல் செய்யும் கட்சி கிடையாது, அரசு மேடையில் பேசிவிட்டு திமுகவினர் அதை கருத்துச் சுதந்திரம் என கூறினார்கள்.

இதையும் படியுங்கள்:  ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் வார்த்தை மோதல்...! அதிமுக நிர்வாகிகளுக்கு திடீர் கட்டளையிட்ட ஓ.பன்னீர் செல்வம்

அப்படி என்றால் கனல் கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம்தான், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் இருக்கும் இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று கருத்துக் கேட்டால் அனைவரும் அகற்றவேண்டும் என்று தான் கூறுவார்கள். தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள்தான் கோவிலுக்கு செல்வார்கள், தெய்வ நம்பிக்கை இல்லாத ஒரு பொது இடத்தில் அந்த சிலையை வைக்கட்டும் இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios