Asianet News TamilAsianet News Tamil

5ஜி மெகா ஊழலில் வகையாக மாட்டிக் கொண்ட மோடி அரசு.. விசாரணையில் இருந்து தப்பவே முடியாது.. அழகிரி.


5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சிக்கியுள்ள மோடி அரசு விசாரணையில் இருந்து தப்ப முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-

Modi government caught in 5G mega scam.. cannot escape from investigation.. Alagiri.
Author
Chennai, First Published Aug 4, 2022, 4:49 PM IST

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் சிக்கியுள்ள மோடி அரசு விசாரணையில் இருந்து தப்ப முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-

கடந்த வாரம் மத்திய அரசு அதிவேக செல்போன் சேவைக்காக ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை பகிரங்கமாக ஏலம் விட்டது. இதில் அரசுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஏலம் நடப்பதற்கு முன்னரே ஆரூடம் கூறினார், ஆனால் சில தினங்களுக்கு முன் முடிந்த இந்த ஏலத்தில் மத்திய அரசுக்கு வெறும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிட்டியது என  மோடி அரசு அறிவித்திருப்பது நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளது.கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் இந்த மோசடிக்கு எதிராக கிளம்பும் விமர்சனங்கள் கவனிக்கத்தக்கவை.

Modi government caught in 5G mega scam.. cannot escape from investigation.. Alagiri.

ஏற்கனவே 3ஜி 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஜி காலத்திலும் அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் பங்கேற்கவில்லை, இதனால் செல்பேசி சந்தையில் பிஎஸ்என்எல் பங்கு 10 சதவீதமாக குறைந்து, மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. முழுக்க முழுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்றன, குறிப்பாக இதுவரை டெலிகாம் சேவை வணிகத்தில் ஈடுபடாத பிரதமர் மோடியின் உற்ற நண்பரான கவுதம் அதானியின் ஏ.டி.என்.எல் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்; செந்தில் பாலாஜி உத்தமர்னு ஸ்டாலின் சொல்லட்டும்... பிறகு மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன். அண்ணாமலை.

இதற்கு மோடியின் பாரபட்ச அணுகுமுறை தான் காரணம்,  முன்னர் 4ஜி ஸ்பெக்ட்ரம் (380.75 மெகாஹெர்ட்ஸ் )  ஏலத்திற்கு விடப்பட்ட போது கிடைத்த வருவாயை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது 5ஜி ஸ்பெக்ட்ரம் (51236 மெகா ஹெர்ட்ஸ்)  ஏலத்தின் மூலம் 134 மடங்கு அதிகமாக வருவாய் மத்திய அரசுக்கு தற்போது கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அரசுக்கு கிடைத்ததோ வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே, அதாவது சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெரும் மோசடி நடந்துள்ளது. மோடி அரசு அதன் குஜராத்தி நண்பர்களுக்காக இந்த மெகா மோசடியை நடத்தி மத்திய அரசின் கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஒரு சில தனியார் டெலிகாம் கம்பெனிகள் லாபம் அடைய மடைமாற்றி விட்டுள்ளது தெளிவாகிறது

இதையும் படியுங்கள்; EE மெயின் தேர்வு முடிவு ஆகஸ்ட் 6 அன்று வெளியீடு… எப்படி பார்ப்பது? முழுவிபரம் இதோ!!

.ஜிஎஸ்டி வரிக்கான கட்டணங்களை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது கடுமையாக உயர்த்தி, அதன் மூலம் சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு இவ்வாண்டு சேவை மற்றும் சரக்கு வரி மூலமாக வருவாய் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக பெருமிதம் கொள்கிறது. ஆனால் அதன் பணக்கார நண்பர்கள் கொள்ளை லாபம் அடைவதற்காக அரசுக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மூலமாக கிடைத்திருக்க வேண்டிய பல லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளது, இதன்மூலம் பாஜக அரசு செல்வந்தர்களின் நான் காக்கும் ஏழை எளியோரை வாட்டி வதைக்கும் அரசாக செயல்படுகிறது.

Modi government caught in 5G mega scam.. cannot escape from investigation.. Alagiri.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்ற தீய நோக்கில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் திட்டப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்ததாக பொய்ப்பிரச்சாரம் நடத்தி 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வினோத் ராய் இட்டுக்கட்டி அறிக்கை வெளியிட்டார், இதற்காக அவருக்கு மோடி அரசில் உயர் பதவி வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு அனுமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மூடிமறைத்து பிரச்சாரம் செய்தனர், இதை ஊழலாக சித்தரிப்பதில் எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டன.

இதன்மூலம் நாடாளுமன்றத்தை மாதக்கணக்கில் முடக்கி அழிச்சாட்டியம் நடத்திய அன்றைய பாஜக இன்று 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் செய்துள்ள மெகா மோசடி குறித்து இன்றைய மோடி அரசு மிகப்பெரிய விசாரணையில் இருந்து தப்பமுடியாது. பாஜகவின் இந்த முடிவு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு நிச்சயம் உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios