செந்தில் பாலாஜி உத்தமர்னு ஸ்டாலின் சொல்லட்டும்... பிறகு மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன். அண்ணாமலை.
அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தமர் என ஸ்டாலின் கூறட்டும், பிறகு நான் அரசியலில் இருக்கும் வரை மின்சாரத்துறை பற்றி எதுவும் பேசமாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தமர் என ஸ்டாலின் கூறட்டும், பிறகு நான் அரசியலில் இருக்கும் வரை மின்சாரத்துறை பற்றி எதுவும் பேசமாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து மின்சார துறை குறித்து ஆதாரமற்ற முறையில் அண்ணாமலை பேசி வருவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஊழலுக்கு பெயர் போன அமைச்சர் என்று செந்தில் பாலாஜியை விமர்சித்தவர் ஸ்டாலின் தான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஊழல் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அண்ணாமலை ஆண்மகனாக இருந்தால் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுக்கலாம் என செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார் மொத்தத்தில் அண்ணாமலை செந்தில் பாலாஜி இடையே மோதலாக வெடித்துள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...! மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் அவசர ஆலோசனை
இது ஒருபுறம் உள்ள நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வை பற்றி பதிலளித்தார், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பி களும் வெளியேறிவிட்டனர். நிதி அமைச்சரின் பதிலை ஏற்றுக் கொள்ளமுடியாமல் வெளிநடப்பு செய்துள்ளனர். பொருளாதார ரீதியாக உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன, ஆனால் இந்தியா வேகமாக வளரக் கூடிய நாடாக உள்ளது.
இன்றைய கணக்கின்படி வளர்ச்சி 7.4 சதவீதம் இருக்கிறது. ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் உண்மைக்கு புறம்பாக பொய்யை காட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள் என்றார். அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மின் கட்டணம் குறித்து புகார் கூறும் பாஜக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக செந்தில்பாலாஜி கூறுகிறார், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதலில் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது தற்போதைய முதல்வர் ஸ்டாலின்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
இதையும் படியுங்கள்: சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?
அப்போது செந்தில்பாலாஜியை ஊழலுக்கு பேர் போன அமைச்சர் என குறிப்பிட்டு பேசினார். இப்போது ஸ்டாலின் அது தவறானது என்றோ, செந்தில்பாலாஜி உத்தமர் என்றோ பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினால் இனி அரசியலில் நான் இருக்கும் வரை மின்சாரத் துறை பற்றி எதுவும் பேச மாட்டேன் எனக் கூறினார்.