சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?
இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பல்வேறு கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற மாடல்களில் ஒன்று லேண்ட் க்ரூஸர். கரடு முரடான சாலைகள், முள் நிறைந்த காடுகள், மணல் நிறைந்த பாலை வனங்கள் என எந்த பாதையில் பயணம் செய்யும் திறன் கொண்டது என்பது தான் இந்த காரின் சிறப்பு அம்சமாகும். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல தலைவர்களின் விருப்பமான காராக லேண்ட் க்ரூஸர் இருந்தது.
இதையும் படிங்க;- திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்திய சபரீசன்... நாங்கள் ஆண்டவனுக்கு, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல.. RS.பாரதி.
பல்வேறு அம்சங்களும் அதிக சொகுசு மற்றும் அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த காரின் மைலேஜ் ஒரு லிட்டர் டீசலுக்கு வெறும் 4 கிலோ மீட்டர் மட்டுமே. தற்போது லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடலை சஹாரா வெர்ஷனில் விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது டொயோட்டா நிறுவனம். புதிய மாடலில் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்து உள்ளதோடு செமி கண்டக்டர் டிமாண்ட் இருப்பதால் போதிய அளவில் உற்பத்தி செய்ய முடியாமல் திண்டாடி வருகிறது. கொரோனா கால கட்டத்தில் உலக தொழில்துறையே தள்ளாட்டம் கண்ட போது அதனுடன் சேர்ந்து தள்ளாடியது கார்களுக்கு தேவையான செமி கண்டக்டர் தயாரிப்பு. அதன் காரணமாகவே லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இந்த காரின் விலை சுமார் 2 கோடி ரூபாய் என்றாலும் பணத்தை கொடுத்த உடன் கிடைத்துவிடாது என்பதும் இந்த காரின் மீதான ஈர்ப்பு ஒரு காரணம் என்றே கூறப்படுகிறது. லேண்ட் க்ரூஸர் காரை புக் செய்துவிட்டு அதை கையில் வாங்குவதற்கு 6 மாதங்களாக முன்பு இருந்த காத்திருப்பு காலம் தற்போது 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 காரை இந்தியாவில் விற்பனை கொண்டு வர இருப்பதாக இன்னும் அறிவிப்பை கூட வெளியிடாமல் இருக்கிறது.
இதையும் படிங்க;- ஜனாதிபதி விருதுக்கு 2 லட்சம் கொடுத்து ஏமார்ந்த அமைச்சர் பொன்முடி மருமகள்.. இது என்னடா திமுகவுக்கு வந்த சோதனை.
இந்த காரைத்தான் தற்போது வாங்கி கெத்தாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. பொதுவாக சொகுசு கார்களை பொறுத்தவரையில் வெளிநாடுகளிலேயே முழுவதுமாக கட்டமைக்கப்பட்டது அல்லது உதிரி பாகங்களை கொண்டு வந்து கட்டமைப்பது என இருவகைகள் உண்டு. கார்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி குறைவு என்பதால் பல கார்கள் அப்படி தான் இந்தியாவில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், சொகுசு கார்கள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதால் கார் விலைக்கு இணையாக இறக்குமதி வரியை செலுதத்த வேண்டும்.
அதாவது 2 கோடி மதிப்பிலான காரை இறக்குமதி செய்தால் அதே 2 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த காருக்கு மொத்த விலை 4 கோடி ரூபாய். அதன் பிறகு பதிவு கட்டணம், மாநில அரசு வரிகள், காப்பீட்டு கட்டணம் என பல லட்சம் செலவாகும். இதனாலே பலரும் வெளிநாட்டில் முழுவதுமா கட்டமைக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய தயங்குகின்றனர். ஆனால், பல பிரபலங்கள் எல்லோருக்கும் முன்பாக நாம் அந்த காரை பயன்படுத்தி விட வேண்டும் என்று விரும்பி பல கோடிகளை செலவு செய்வது வழக்கம். இப்படி தான் டொயோட்டா நிறுவன காரின் மீது அதிக ஆர்வம் கொண்ட அமைச்சர் நேரு தற்போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடல் காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க;- மொத்த வரி அதிகாரமும் மத்திய அரசிடம் குவிந்துள்ளது.. தயவு செய்து மக்களை வாட்டும் வரியை குறையுங்கள்.. பிடிஆர்.