Asianet News TamilAsianet News Tamil

ஜனாதிபதி விருதுக்கு 2 லட்சம் கொடுத்து ஏமார்ந்த அமைச்சர் பொன்முடி மருமகள்.. இது என்னடா திமுகவுக்கு வந்த சோதனை.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மருமகள் ஜனாதிபதி விருதுக்காக 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக  புகாரில் கோவை குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இது தெரியவந்துள்ளது

.
 

Minister Ponmudi's daughter-in-law who paid 2 lakhs for the prisedant award... This is a test for DMK.
Author
Chennai, First Published Aug 2, 2022, 6:39 PM IST

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மருமகள் ஜனாதிபதி விருதுக்காக 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக  புகாரில் கோவை குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

திமுகவில் சீனியர் அமைச்சர்களில் ஒருவர் பொன்முடி, தற்போது  உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வருகிறார், சிறந்த பேச்சாளர், திமுகவின் கொள்கையில் பிடிப்பு கொண்டவர், எதையும் புள்ளி விபரத்துடன் பேசக்கூடியவர் என்ற பிம்பம் இவருக்கு இருந்துவருகிறது. இவரது மகன் கௌதம சிகாமணி இவர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் கௌதம சிகாமணியின் மனைவிர பொன் முடியின்  மருமகள் கவிதா சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

Minister Ponmudi's daughter-in-law who paid 2 lakhs for the prisedant award... This is a test for DMK.

கவிதா மருத்துவராக இருந்து வருகிறார், இந்நிலையில்தான் பணம் கொடுத்து குடியரசுத் தலைவர் விருது வாங்க முயற்சித்த நிலையில் அவர் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது பொன்முடியின் ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விவரம் பின்வருமாறு கோவையைச் சேர்ந்தவர் பிரபு, இவர் யூனிசெப் என்ற சர்வதேச அமைப்பை போன்று இன்டர்நேஷனல் கவுன்சில் என்ற பெயரில் ஒரு அமைப்பு நடத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக சமூக சேவை செய்வதாக கூறிக்கொள்ளும் இவர் மருத்துவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகளை குறிவைத்து அவர்களுக்கு தனது நிறுவனத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்: பெட்ரோல் டீசல் வரி குறைப்பு விவகாரம்... தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

இந்நிலையில் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு குடியரசு தலைவர் விருது, குடியரசு தலைவர் ஜனசேவ புஷ்கர் விருது, முதல்வர் கவர்னர் மாளிகை சமூக சேவகர் விருது போன்ற விருதுகளை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இந்நிலையில் இவரை நம்பி பணம் கொடுத்தவர்கள் விருது கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் சம்பவத்தையடுத்து இந்த பிரபு என்பவர் டுபாகூர் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது. பலரையும் நம்ப வைத்து லட்சக்கணக்கில் இவர் ஆட்டையை போட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: கள்ளக் குறிச்சி மாணவி விஷயத்தில் விசாரணை முடிச்சிட்டோம்.. 2வது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வரட்டும்.. அண்ணாமலை.

இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பல திடுக்கிடம்  தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த சலீம் ராஜா என்பவர்  விருதுக்காக பலரிடம் பெற்று 14 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார், இந்நிலையில் விருது கிடைக்காததால், சலீம் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் விருது மோசடி மன்னன் இக்னேஷியஸ் பிரபு என்பவர் UNICEF International Council என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அதில் பல விருதுகள் வழங்குவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று வருகிறார்.

Minister Ponmudi's daughter-in-law who paid 2 lakhs for the prisedant award... This is a test for DMK.

அந்த அடிப்படையில் நானும் 14 லட்ச ரூபாய் அவரிடம் வழங்கியுள்ளேன், ஒரு வருடம் ஆகியும் விருது கிடைக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை, இவரது அலுவலகம் கோவை புதூர் ஐஓபி பேங்க் மாடியில் MR knowledge Academy என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் ஜனாதிபதி விருதுக்காக2 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்த ஆறு பேரில் ஒருவர் டாக்டர் கவிதா கௌதம் சிகாமணியும் ஆவார், இவர் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களின் மருமகள் ஆவார், கவுதம சிகாமணி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என அந்த பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் பொன்முடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சரின் மருமகள், நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி, மெத்தப் படித்த மருத்துவர், இதுபோல போலி நபர்களை நம்பி இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ஏமாறலாமா? அதிலும் பணம் கொடுத்து விருது வாங்கும் அளவுக்கு அமைச்சரின் மருமகள் முயற்சிக்கலாமா? இது போன்று அற்பத்தனமாக செயல்படுவது, பணம் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம்  என்ற குறுகிய எண்ணத்துடன் அமைச்சரின் மருமகள் செயல்படலாமா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios