முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

'கடைக்குட்டி சிங்கம்', படத்திற்கு பின்னர், கார்த்தி கிராமத்து வேடத்தில் நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் இந்த மாதம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடைசியாக கார்த்தி நடிப்பில், கடந்த ஆண்டு 'சுல்தான்' படம் வெளியான நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்தியின் படம் வெளியாக உள்ளதால், அவரது ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரவேற்க கார்த்திருக்கின்றனர். இந்த படத்தை மிக பிரமாண்டமாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்: பொய் சொல்கிறாரா? விக்னேஷ் சிவன் விளக்கத்தால் சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு!

கிராமத்து கதைகளை இயக்குவதில் கை தேர்ந்த இயக்குனரான முத்தையா, இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள், அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இன்று மதுரையில் 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், இயக்குனர் ஷங்கர், அவரது மனைவி, இயக்குனர் முத்தையா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்: மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!

இசை வெளியீட்டுக்காகவே மிக பிரமாண்ட செட் மற்றும் ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை தொடர்த்து தற்போது, 'விருமன்' படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்தி காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் பின்னி பெடல் எடுத்துள்ளார். வழக்கம் போல், குடும்ப பின்னணியை வைத்தும், அதில் நடக்கும் பிரச்சனைகளை வைத்தும் இப்படம் உருவாகியுள்ளது தெரிகிறது. அதே போல் கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ளார் அதிதி. 

தற்போது வெளியாகியுள்ள 'விருமன்' பட ட்ரைலர் இதோ...Viruman - Official Trailer | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya