மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!
கோப்ரா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மஞ்சள் நிற லெஹங்காவில் அழகிய மஞ்சள் மலர் போல் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கன்னடத்தில் வெளியாகி, தமிழ், இந்தி, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட 'KGF' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
28 வயதாகும், ஸ்ரீநிதி ஷெட்டி... கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர். இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார்.முன்னணி மாடலாகவும் இருந்து வருகிறார்.
தன்னுடைய முதல் படத்திலேயே... உலக அளவில் பிரபலமான, ஸ்ரீநிதி ஷெட்டி... தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், நடிகர் விக்ரம் 7 விதமான மிரட்டல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்: ஹீரோயின் லுக்கில்... செம்ம ஸ்டைலிஷாக குட்டி நயன் அனிகாவை ஓரம் கட்டும் சூர்யாவின் ரீல் மகள் யுவினா பார்த்தவி!
ஆகஸ்ட் மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்தப்படுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது. கண்ட மேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார். எனவே தமிழில் 'கோப்ரா' ரிலீசுக்கு பின்னரே மற்ற படங்களில் கமிட் ஆகும் முடிவில் ஸ்ரீநிதி ஷெட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
KGF படத்தின் வெற்றிக்கு பிறகு தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, 'கோப்ரா' படத்திற்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விதவிதமான உடைகளில் போட்டோ செஹுட் செய்து புகைப்படம் வெளியிட்டு வரும், ஸ்ரீநிதி ஷெட்டி... மஞ்சள் நிற லெஹங்காவில், மனம் மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத கிளாமர்! உச்ச கவர்ச்சியில் ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட புகைப்படம்