திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத கிளாமர்! உச்ச கவர்ச்சியில் ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட புகைப்படம்
நடிகையும், பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா... திருமணம் ஆகி குழந்தை பெட்ரா பின்பும் குறையாத கிளாமர் லுக்கில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய வெளியான 'வனமகன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாயிஷா. இந்த படத்தை தொடர்ந்து, 'கடைக்குட்டிசிங்கம்', 'ஜூங்கா' 'காப்பான்', போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் ஆர்யாவை சாயிஷா திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு மகள் ஒருவரும் உள்ளார்.
மேலும் செய்திகள்: ஹீரோயின் லுக்கில்... செம்ம ஸ்டைலிஷாக குட்டி நயன் அனிகாவை ஓரம் கட்டும் சூர்யாவின் ரீல் மகள் யுவினா பார்த்தவி!
திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாக 'டெடி' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சாயிஷா தமிழில் நடித்தார். எனினும் அவ்வப்போது தன்னுடைய கியூட் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்த வகையில் தற்போது சாயிஷா செம, படு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து, ‘நான் 99% ஏஞ்சல், ஆனால் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!
இவரது இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் கூட இவரது கிளாமர் கொஞ்சம் கூட குறையவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.