ஹீரோயின் லுக்கில்... செம்ம ஸ்டைலிஷாக குட்டி நயன் அனிகாவை ஓரம் கட்டும் சூர்யாவின் ரீல் மகள் யுவினா பார்த்தவி!
குழந்தை நட்சத்திரமான யுவினா பார்த்தவி தற்போது ஹீரோயின் லுக்கிற்கு மாறி, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
'உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற சீரியல் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுத்த யுவினா பார்த்தவி, இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் இவர் முதல் முதலில் அறிமுகமான, 'மதகஜ ராஜா' திரைப்படம் வெளியாகாமல் போகவே, கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேறு மாதிரி' படம் இவரது அறிமுக படமாக அமைந்தது.
மேலும் செய்திகள்: ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!
முதல் படத்திலேயே இவரது கியூட் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்த வகையில், வீரம், மஞ்சப்பை, அதிதி, அரண்மனை 2, என அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தது. குறிப்பாக இவர் சூர்யாவுக்கு மகளாக நடித்த 'மாஸ்' படத்தில் இவரது நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.
சுமார் 15-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள யுவினா, தமிழை தொடர்ந்து... தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணீதா! அம்மாவை போல் கொள்ளை அழகு!
இவருடைய அம்மா ஒரு மாடல் என்பதால், இவருக்கு சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது. அதே போல் தற்போது பல்வேறு விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் யுவினா.
கடைசியாக இவர் நடிப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு... சர்க்கார் படம் ரிலீஸ் ஆகிய நிலையில், தற்போது படிப்பிலும், அவ்வப்போது சில ரியாலிட்டி ஷோக்களிலும் தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகள்: பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!
தற்போது பார்ப்பதற்கு, ஹீரோயின் லுக்கில் இருக்கும் யுவினா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அப்படி இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வேறு லெவலுக்கு நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.