முதல் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரணீதா! அம்மாவை போல் கொள்ளை அழகு!
நடிகை பிரணீதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில், தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'உதயன்' பதின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரணீதா. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி, சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்ததால் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பிரணீதா முன்னணி நடிகர்களுடன் நடித்த படங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால், தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது, அதே நேரம்... தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் செய்திகள்: 'பத்து தல' படத்தில் படு மாஸ் கெட்டப்பில் சிம்பு..! வைரலாகும் வேற லெவல் லுக்..!
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். கொரோனா காலத்தில், திருமணம் நடந்தாலும் இது திடீர் என எடுத்த முடிவு என்பதாலும் ரசிகர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என கூறி, திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
திருமணத்திற்கு பின்பும், குடும்பத்தினர் அனுமதியுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிரணீதா, கர்ப்பமாக இருந்ததால் பட வாய்ப்புகளை சமீப காலமாக தவிர்த்து வந்தார்.
மேலும் செய்திகள்:பிகினி எல்லை தாண்டிய கவர்ச்சி... மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை ஏங்க விடும் வேதிகா!
தற்போது இவருக்கு குழந்தை பிறந்து ஓரிரு மதமே ஆகும் நிலையில், முதல் முறையாக தன்னுடைய மகள் அர்ணாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு, அப்படியே பிரணீதாவை போலவே அவருடைய மகளும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.