பொய் சொல்கிறாரா? விக்னேஷ் சிவன் விளக்கத்தால் சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு!
ஒலிம்பியாட் துவக்க விழாவில், நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ, தெருக்குரல் அறிவு பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும், மாரியம்மாள் ஆகியோர் பாடி இருந்தந்தனர். இதுவே பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.
ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக அறிவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என சிலர் போர் கொடி தூக்க, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அறிவு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒதுக்கப்படுவது போன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில்... "என்ஜாய் எஞ்சாமி பாடலை, நானே எழுதி, இசையமைத்து,பாடியது மட்டும் இன்றி நடித்தும் இருந்தேன். இந்த பாடலை உருவாக்குவதற்கு யாரும் எனக்கு ஒரு ட்யூன் போட்டு கொடுத்தோ...; மெலடியோ தயார் செய்து கொடுத்தோ அல்லது ஒரே ஒரு வார்த்தையையோ கூட கொடுத்து உதவவில்லை. இந்த பாடலுக்காக 6 மாதங்கள் தூக்கத்தை தொலைத்து, மனஅழுத்ததோடு உழைத்திருக்கிறேன்.
மேலும் செய்திகள் : மதுரையை கலக்கும் 'விருமன்'... இசை வெளியீட்டு விழாவுக்கே இவ்வளவு பிரமாண்டமா? வைரல் வீடியோ..!
அதே நேரம் இப்பாடல் உருவாவதற்கு கூட்டு முயற்சியும் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது எல்லாருக்குமான பாடல் தான், ஆனால் இப்பாடல் வள்ளியம்மாளின் சரித்திரத்தையோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக இருந்து கஷ்டப்பட்ட என் முன்னோர்களின் வாழ்க்கையையே, குறிப்பிடவில்லை என்பது அர்த்தமில்லை. நம் மண்ணில் 10,000-த்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசை பாடல்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் நம் முன்னோர்களின் வலி, வாழ்க்கை, வேதனை அன்பு, போன்றவற்றை எடுத்து கூறும் பாடல்களாகவே உள்ளது. நம் பாடல்கள் மூலமாகவே பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம் என்றும், அதே போல் நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது முடியாது. என்றும் முடிவில் உண்மை எப்போதும் வெல்லும்" என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் தீ ஆகியோரும், இந்த பாடலுக்காக அனைவரும் உழைத்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அறிவை அழைத்தபோது அவர் அமெரிக்காவில் இருந்தார் அதனால் அவரால் கலந்து கொள்ள முடியவிலை என ஒரு சேர தெரிவித்திருந்தனர். மேலும் அறிவின் திறமையை மதிப்பதாகவும் தங்களுடைய நீண்ட அறிக்கையில் கூறி இருந்தனர்.
மேலும் செய்திகள் : கைவசம் தொழில் இருக்கு... கடை வச்சுக்கூட பொழச்சுக்குவேன்! இதற்க்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன் சாய்பல்லவி கறார்!
vignesh shivan
இதை தொடர்ந்து, ஒலிம்பியாட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த விக்னேஷ் சிவன், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க, அறிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் அமெரிக்காவில் இருந்து வந்து இசை நிகழ்ச்சியை முடித்து கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்கா செல்லவும் ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறியும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் மிகவும் திறமை சாலி எனவே அவருக்கு பதில் நாங்கள் யாரையும் மாற்றி பாட வைக்கவில்லை என கூறியுள்ளார்.
இப்படி இருக்க, அறிவு தான் ஒதுக்க படுவது போல், தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவனின் இந்த விளக்கத்திற்கு பின்னர் அறிவு பொய் சொல்லி புது பிரச்னையை கிளப்புகிறாரா? என்பது போல் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு அறிவு தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகள் : மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!