கைவசம் தொழில் இருக்கு... கடை வச்சுக்கூட பொழச்சுக்குவேன்! இதற்க்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன் சாய்பல்லவி கறார்!
நடிகை சாய் பல்லவியிடம், நெருக்கமான காதல் காட்சிகளிலும், கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க கூறும் இயக்குனர்களிடம் கடை வைத்து கூட பிழைத்துக்கொள்வேன் ஆனால் ஒரு போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கறாராக கூறி விடுகிறாராம்.
திரையுலகில் ஜெயிக்க கவர்ச்சி காட்ட வேண்டும் என்பது அவசியம் இல்லை. தரமான கதை தேர்வும், நடிப்பு திறமையும் இருந்தால் போதும் என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருபவர் நடிகை சாய் பல்லவி.
இவர் 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அறிமுகமானத்தில் இருந்து, சமீபத்தில் டீசச்சராக நடித்து வெளியான 'கார்கி' படம் வரை, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?
தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளிலும் நடிக்க விரும்பாத சாய் பல்லவி, ஹீரோக்களுடன் டூடயட் பாடுவதை விட, கதையின் நாயகியாகவும், சவாலான கதாபாத்திரத்தையும் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். என்பது அவரது சமீபத்திய படங்களின் தேர்வுகளை பார்த்தாலே தெரியும்.
இந்நிலையில் இவரை சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் கூட, நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும், கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க கூறி சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அணுகியபோது, அவர்களிடம்... கை வசம் மருத்துவர் தொழில் இருக்கு, அதுவும் இல்லனா கடை வச்சு கூட பொழச்சிப்பேன் ஆனால் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன் என கறாராக பேசுவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!