- Home
- Cinema
- டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?
டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?
சரவணன் அருள் நடிப்பில் வெளியாகியுள்ள 'தி லெஜெண்ட்' திரைப்படம் வெளியானது முதலே தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், தற்போது தமிழகத்தில் மட்டுமே 6 நாட்களில் 7 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில், ஜூலை 28 ஆம் தேதி வெளியான 'தி லெஜெண்ட்' திரைப்படம் ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதிலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதே நேரம் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சரவணன் அருள் கூறி இருந்தாலும், கதைக்களம் வீக்காக இருப்பது தான் படத்தின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக, ஊர்வசி ரவுத்தலே கோலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா ,ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக நடிகர் விவேக் நடித்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!
the legend
தொழிலதிபர் சரவணனின் தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் மே 29 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. சரவணன் லெஜண்ட் சரவணன் என்று அழைக்கப்படுகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜோடியான ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஊர்வசி ரவுத்தேலா, சுமன், கீதிகா, புகழ், பிரபு, மறைந்த விவேக், விஜயகுமார், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா மற்றும் நாசர் உள்ளிட்ட நடிகர்கள் குழுமத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் சுமார் 7 கோடிக்கு மேல் வசூலித்ததாக பட தரப்பினர் மத்தியில் கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் மட்டும் சுமார் 6 நாட்களில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல திரையரங்குகளில் படம் இன்னும் ரசிகர்களின் ஆதரவோடு ஓடி கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் குறையாத கிளாமர்! உச்ச கவர்ச்சியில் ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட புகைப்படம்