‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் மே மாதத்தில் என்னென்ன சூர்யா படங்கள் வெளியானது என்பதை பார்க்கலாம்.

Karuppu Release Date
நடிகர் சூர்யா ஹீரோவா நடிக்கிற அடுத்த படம் 'கருப்பு'. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குறார். இது ஒரு பக்கா மாஸ் கமர்ஷியல் படமா உருவாகுது. படத்தோட சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் விற்கப்பட்டுவிட்டதா சினிமா வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸும், சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழும் வாங்கியிருக்கிறதா தகவல். ஆனா, இதுபத்தி படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமா எதுவும் சொல்லல. இந்தப்படம் வர்ற மே 14-ம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆகப்போகுது.
கருப்பு படத்தின் ஸ்பெஷல்
இந்தப் படத்தோட இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு அப்புறம் சூர்யாவும் த்ரிஷா கிருஷ்ணனும் மறுபடியும் ஜோடி சேர்றதுதான். 'கருப்பு' படத்துல சூர்யா, த்ரிஷா ரெண்டு பேருமே இதுக்கு முன்னாடி நடிச்ச படங்களை விட வித்தியாசமான ஒரு மேக்ஓவர்ல வருவாங்க. இவங்களோடு இந்திரன்ஸ், சுப்ரீத் ரெட்டி, நட்டி, அனகா மாயா ரவி, சுவாசிகா, ஷிவதா மாதிரியான ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்குது.
கருப்பு டீம்
சமீபத்துல பல ஹிட் பாடல்களைக் கொடுத்த இளம் மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர் தான் 'கருப்பு' படத்துக்கு இசை அமைக்கிறார். பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்ச ஜி.கே. விஷ்ணு கேமரா வேலைகளைப் பார்க்கிறார். கலைவாணன் படத்தோட எடிட்டிங்கை கவனிக்கிறார். இந்தியாவையே மிரள வச்ச அன்பறிவ் மற்றும் விக்ரம் மோர் ஜோடிதான் படத்தோட ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைச்சிருக்காங்க. விருது வாங்குன புரொடக்ஷன் டிசைனர் அருண் வெஞ்சாரமூடு இந்த பிரம்மாண்ட படத்துக்காக செட் அமைச்சிருக்கார்.
ராசியில்லாத மே மாதம்
கருப்பு மே மாசம் ரிலீஸ் ஆகுறதால இதற்கு முன்னாடி அந்த மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களோட வரலாற்றை எடுத்துப் பார்த்தால், 3 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் ஒன்று சூர்யா நடிச்ச 24 திரைப்படம். இப்படம் 2026-ம் ஆண்டு மே 6-ந் தேதி ரிலீஸ் ஆகிருக்கு. அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்துல சூர்யா நடிச்ச என்.ஜி.கே படமும் 2019ம் ஆண்டு மே 31ந் தேதி ரிலீஸ் ஆகியிருக்கு. கடைசியாக சூர்யா நடிப்புல ரிலீஸ் ஆன ரெட்ரோ படமும் மே 1ந் தேதி வெளியானது. மேற்கண்ட 3 படங்களும் பெரிய வெற்றியை ருசிக்கவில்லை. இதனால் மே மாசம் சூர்யாவுக்கு ஒரு ராசியில்லாத மாசமாகவே இதுவரை இருந்துள்ளது. இந்த டிரெண்டை கருப்பு உடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
