MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Anirudh : ஒய் திஸ் கொலவெறி... தனுஷை கண்டுகொள்ளாத அனிருத்? நன்றி மறந்தாரா ராக்ஸ்டார்?

Anirudh : ஒய் திஸ் கொலவெறி... தனுஷை கண்டுகொள்ளாத அனிருத்? நன்றி மறந்தாரா ராக்ஸ்டார்?

Anirudh Controversy : இசையமைப்பாளர் அனிருத் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதையொட்டி அவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 16 2026, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சர்ச்சையில் சிக்கிய அனிருத்
Image Credit : imdb

சர்ச்சையில் சிக்கிய அனிருத்

தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசைக்கும், பாடல்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள அனிருத், திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அனிருத் தனது நினைவுகளையும் அனுபவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த நீண்ட பயணத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகள், மறக்க முடியாத தருணங்கள், ரசிகர்களின் அளவற்ற அன்பு எனப் பல விஷயங்களை நினைவுகூர்ந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகள் பல ஆச்சரியங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது இசைப் பயணத்தின் சிறந்த தருணங்கள் இன்னும் வரவிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இசைப் பயணம்!
Image Credit : X

15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இசைப் பயணம்!

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான '3'. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் 2011-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மொழிகளைக் கடந்து உலகம் முழுவதும் பிரபலமான இந்தப் பாடல், அனிருத்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன்பிறகு எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, மாஸ்டர், விக்ரம், ஜெயிலர் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை நிரூபித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசை முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வளர்ந்தார்.

35
ரசிகர்களுக்கு அனிருத் சொன்ன நன்றி!
Image Credit : Facebook

ரசிகர்களுக்கு அனிருத் சொன்ன நன்றி!

தனது 15 ஆண்டுகால பயணத்தில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை அனிருத் மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். தனது பாடல்களைக் கொண்டாடியது மட்டுமின்றி, இசை நிகழ்ச்சிகளில் நேரில் வந்து உற்சாகப்படுத்தியது, பாடல்களைத் தங்களுடையதாக நினைத்து ரசித்தது என ரசிகர்கள் அளித்த அன்பு ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் தொடங்கிய தனது இசைப் பயணம் தற்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் விரிவடைந்துள்ளது. பல திறமையான இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளார். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் பலரது உழைப்பும் ஆதரவும் இருப்பதாகவும் நன்றியைப் பகிர்ந்துள்ளார்.

45
இனிமேல்தான் உண்மையான ஆட்டம்!
Image Credit : Facebook/ Anirudh Ravichander

இனிமேல்தான் உண்மையான ஆட்டம்!

15 ஆண்டுகளைக் கடந்து வந்த தனது இசைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்து மகிழ்ந்துள்ள அனிருத், இதுவரை கிடைத்த வெற்றிகளுடன் நின்றுவிடப் போவதில்லை என்பதையும் தனது பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் பல கனவுகள், புதிய இசை முயற்சிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இசைப் பயணத்தின் புதிய அத்தியாயத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

55
தனுஷை குறிப்பிடாதது ஏன்?
Image Credit : our own

தனுஷை குறிப்பிடாதது ஏன்?

அனிருத்தின் இந்த எமோஷனல் பதிவில் அவருக்கு முதன்முதலில் வாய்ப்பளித்த தனுஷுக்கு ஒரு இடத்தில் கூட நன்றி தெரிவிக்கவில்லை. அனிருத்திடம் இசை ஆர்வம் இருப்பதை அறிந்த தனுஷ், அவரின் பெற்றோர் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க முயன்றதையும் மீறி, அவருக்கு இசைக் கருவிகள் வாங்கிக் கொடுத்து, தன்னுடைய படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி அவருக்கு மிகப்பெரிய உதவியை செய்தார். அப்படி இருந்தும் அவரின் பெயரை அனிருத் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடாதது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. அவரை நெட்டிசன்கள் இணையத்தில் கடுமையாக சாடி வருகின்றனர். அவர் நன்றி மறந்துவிட்டார் என விமர்சித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
தனுஷ்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : ஜேசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹவுஸ்மேட்ஸ்... இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
Recommended image2
Rajinikanth : ரஜினிகாந்த் தன் முழு சொத்துக்களையும் தமிழ் மக்களுக்காக எழுதி வைப்பேன் என சொன்னாரா? உண்மை பின்னணி இதோ
Recommended image3
Music: ஒரே ராகத்தில் 2 சூப்பர் ஹிட் பாடல்கள்.! கண்ணதாசன் செய்த மேஜிக்.! இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Arasan Anirudh : வெற்றிமாறன் உடன் மோதல்?... அரசன் படத்தில் இருந்து விலகினாரா அனிருத்?
Recommended image2
Anirudh - Kavya Maran : அடேங்கப்பா... கிரீஸில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண செலவு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved