காசு வாங்க ஒரு லவ்வர்! கல்யாணத்துக்கு இரண்டாவது லவ்வர்! கில்லாடி பெண்ணை அதிரடியாக கைது செய்த போலீஸ்!

கடந்த 5 வருடமாக காதலிப்பது போல் பொறியாளர் ஒருவரை, நகை, பணம், ஆகியவற்றை வாங்கி கொண்டு ஏமாற்றி வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

girl cheeting 2 boy friend

கடந்த 5 வருடமாக காதலிப்பது போல் பொறியாளர் ஒருவரை, நகை, பணம், ஆகியவற்றை வாங்கி கொண்டு ஏமாற்றி வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உமாவும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பொறியாளர் சோதிரிராஜாவும் பிரபல கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் இணைந்து வேலை செய்து வந்தபோது  பழக்கம் ஏற்பட்டது. பின் இந்த பழக்கம் காதலாக மாறியது.

girl cheeting 2 boy friend

இதனால் உமா அந்த கார் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு விட்ட போதிலும் இவர்களுடைய காதல் தொடர்ந்துள்ளது. தினமும் போன் பேசுவது மற்றும் அவ்வப்போது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் ஜோடியாக வெளியில் சுற்றி வந்துள்ளனர். 

girl cheeting 2 boy friend

மேலும் உமாவின் அழகில் மயங்கி... ஒவ்வொரு மாதமும், சோதிரிராஜா உமாவின் செலவுக்கு என குறிப்பிட்ட தொகையை அவருடைய வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். உமா எப்போது பணம் வேண்டும் என கேட்டாலும் கடன் உடன் வாங்கி கூட அவருடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார். 

girl cheeting 2 boy friend

அதே போல் உமா தன்னுடைய வருங்கால மனைவி என்கிற நினைப்பில் நான்கு சவரன் வளையல், மற்றும் 9 பது சவரனுக்கு தாலி சரடும் வாங்கி கொடுத்துள்ளார் சோதிரிராஜா. இவை அனைத்தையும் பயன்படுத்தி கொண்ட உமா திடீர் என சாதியை காரணம் காட்டி சோதிரிராஜாவிடம் இருந்து விலக துவங்கியுள்ளார். 

girl cheeting 2 boy friend

பின்னர் தனக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து தாங்கள் பதிவு திருமணம் செய்து விட்டதாகவும் கூறி சோதிரிராஜாவை அதிர வைத்துள்ளார். மேலும் தன்னுடைய திருமண வரவேற்ப்பிற்கும் சோதிரிராஜாவிற்கு அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு சோதிரிராஜாவும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. 

girl cheeting 2 boy friend

காதல் தான் தோல்வியடைந்து விட்டது,  தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திரும்பி கொடுத்து விடுமாறு உமாவிடம் கேட்டுள்ளார். அதற்கு உமா கண்டிப்பாக திருப்பி தந்து விடுவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு மொபைல் என்னை மாற்றியுள்ளார். 

பின்னர் உமா, குறித்து விசாரித்த போது சோதிரிராஜாவிற்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது, " அதாவது உமா திருமணம் செய்துகொண்ட பரமசிவனை 2 வதாக காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது". 

girl cheeting 2 boy friend

உமாவால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சோதிரிராஜா, உமாவின் காதல் கணவர் பரமசிவனிடம் தனக்கு அரங்கேறிய கொடுமை குறித்து கூறி நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் பரமசிவன், சோதிரிராஜாவை மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் சோதிரிராஜா, தனது வங்கி கணக்கு, நகைக்கடை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை காட்டி புகார் அளித்தார். பின் போலீசார் காதலித்து ஏமாற்றிய  உமாவை அழைத்து விசாரித்த காவல்துறையினர் அவரையும், கொலை மிரட்டல் விடுத்த கணவர் பரமசிவனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios