முதியவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம்.! வெளியான முக்கிய அறிவிப்பு
மூத்த குடிமக்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி டிசம்பர் 21 முதல் ஜனவரி 31 வரை உரிய மையங்களில் டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
chennai bus
தமிழக அரசின் பேருந்து பயண திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணம், மகளிர்களுக்கு விடியல் திட்டத்தின் கீழ் இலவச பேருந்து பயணம் என பல சலுகை திட்டங்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் சுமார் 1000 ரூபாய் வரை சேமிக்கும் நிலை உள்ளது. இதே போல முதியவர்களுக்கும் இலவசமாக பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
chennai bus service
இலவச பேருந்து பயண டோக்கன்
அந்த வகையில் அடுத்த 6 மாதம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி-2025 முதல் ஜூன்-2025 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAMILNADU BUS
தேதி அறிவித்த போக்குவரத்து துறை
அதன் படி 42 மையங்களில் வரும் 21 டிசம்பர்-2024 முதல் 31 ஜனவரி-2025 மாதம் வரை விடுமுறையின்றி, அனைத்து நாட்களும் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை வழங்கப்படும். அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை,
Chennai Bus Ticket
ஆவணங்கள் என்ன.?
வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை etc) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்பொழுது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன். தங்களின் தற்போதைய Passport size அளவிலான ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் தெரிவிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.