MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த ஜென்மத்தில்.! முதல்வருக்கு திடீரென நன்றி சொன்ன தவெக தலைவர் விஜய்.!

அடுத்த ஜென்மத்தில்.! முதல்வருக்கு திடீரென நன்றி சொன்ன தவெக தலைவர் விஜய்.!

TVK Vijay: தஞ்சாவூர் செங்கிபட்டியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆளும் திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 04 2026, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
Image Credit : Asianet News

தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

தஞ்சாவூர் செங்கிபட்டியில் இன்று தமிழக வெற்றிக்கழகம் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய விஜய் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில்: நான் வேலூரில் பேசியபோது தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று சொன்னேன். அதை ஏன் சொன்னேனென்றால், தமிழ்நாட்டு மக்களின் ஒரே உண்மையான பிரதிநிதியாக நாம் மட்டுமே இருக்கிறோம் என்பதால் தான் சொல்லி இருந்தேன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தில்லுமுல்லு வேலை
Image Credit : Asianet News

தில்லுமுல்லு வேலை

தேர்தல் குறித்து தமிழ்நாடு வெர்சஸ் ஸ்டாலின் சார் என்று சொன்னேன். அதாவது, விஜய் வெர்சஸ் ஸ்டாலின் சார். இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். இதை ஏன் தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். உடனே, விஜய் பாஜகவுக்காகப் பேசுகிறார் என்று என் பேச்சை திரித்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலை செய்வாங்களே. அதை இனிமேல் செய்ய முடியாது என தெரிந்துகொண்டு நான் பேசுவதை திரித்து பேசி தில்லுமுல்லு வேலை செய்கின்றனர்.

Related Articles

Related image1
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Related image2
சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
35
ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி
Image Credit : Asianet News

ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி

சென்னையில் டெல்லி, டெல்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் டெல்லிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதும் யாரென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். சின்னப் பசங்க கூட இப்போ சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி என்று கூறினார். எனக்கும் மக்களுக்குமான உறவு இயற்கையாகவே அமைந்த உறவு. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது Election. எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இது EMotion.

45
சரித்திரமே கிடையாது
Image Credit : Asianet News

சரித்திரமே கிடையாது

அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அடுத்ததும் நாங்கள் தான் என CM சார் சொல்வாங்க; அது நடக்கவே நடக்காது. 2-வது முறை வந்ததெல்லாம் சரித்திரமே கிடையாது. அவரது அப்பாவாலேயே அது முடியவில்லை. விஜய் வந்தால் பிழைப்பு போய்விடும் என்று என்னை தடுக்க திமுகவும், அதிமுகவும் மறைமுக டீலிங் போட்டு செயல்படுகின்றனர். ஒருபக்கம் என் பிரசாரத்தை முடக்க SOP போடுகின்றனர். மறுபக்கம் பழிமேல் பழி போடுகின்றனர்.

55
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
Image Credit : Asianet News

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

கரூர் முதல் ஜனநாயகன் படம் ரிலீஸ் வரைக்கும் இப்படித்தான் நடந்தது. ஜனநாயகன் படத்துக்கு குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி. வெளிப்படையாக பேசுவதால் முதல்வர் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா முதலில் கட்சிக்காரன் தூங்கவிடவில்லை. இப்போது விஜய்யும் தூங்க விடல. நீட் தேர்வை ஒழிப்போம் என்றீர்கள். எவ்வளவு பெரிய மோசடி. இது மோசடி ஆட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
மு. க. ஸ்டாலின்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
Holiday: தொடர் விடுமுறை! அரசு போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்! பயணிகளின் கவனத்திற்கு..!
Recommended image2
Now Playing
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Recommended image3
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Related Stories
Recommended image1
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image2
சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved