cinema
நடிகர் திலகம் சிவாஜி சிவாஜி கணேசனுக்கு ராம் குமார் - பிரபு என இரு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் ராம் குமாருக்கு, முதல் மனைவி கண்ணம்மா மூலம் சிவகுமார் என்கிற மகன் உள்ளார். இளம் வயதிலேயே தாயை இழந்த இவரை படிக்க வைத்து வளர்த்தது சித்தி ஸ்ரீப்ரியா தான்.
இரண்டாவது மனைவி மீனாட்சி மூலம், ராம் குமாருக்கு துஷ்யந்த் என்கிற மகனும் தர்ஷன் - ரிஷ்யன் என இரட்டை குழந்தைகளும் பிறந்தனர்.
சிவாஜியின் இரண்டாவது மகனான பிரபுவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். விக்ரம் பிரபு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
துஷ்யந்த் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தோல்வியை தழுவியதால் முழுமையாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.
இவரை தொடர்ந்து ராம் குமாரின் இரண்டாவது மகனான தர்ஷன் தற்போது திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இதுவரை கோக், டைரி மில்க் உள்ளிட்ட பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் தர்ஷன்.
டெல்லியில் நடிப்பு குறித்து சிறப்பு பயிற்சி பெற்றுள்ள தர்ஷன், கூத்து பட்டறை மற்றும் பல நாடகங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் செய்தி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதற்க்கு முன்னதாக இவரின் திருமண செய்தி வெளியாகியுள்ளது.
தர்ஷனுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த பெண்ணை தான் தர்ஷன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால், இது ஒரு காதல் வாய்ப்புகள் அதிகம் என கூறி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷனுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.