பிராமணர்களாகவே இருந்தாலும், கருவறைக்குள் செல்ல முடியாது.! இவர்களுக்கு மட்டுமே அனுமதி- கஸ்தூரி அதிரடி
நடிகை கஸ்தூரி, இளையராஜா கோவில் சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். அர்ச்சகராக இல்லாவிட்டால் யாரும் கருவறைக்குள் செல்ல முடியாது என்றும், இளையராஜா கருவறைக்குள் செல்ல முயற்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிராமனர்களாகவே இருந்தாலும், அர்ச்சகராக இருந்தால் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்தப்பின் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில்,
நான் சர்ச்சையில் சிக்கிய போது லண்டனில் இருந்த போதும் அண்ணாமலை தனக்கு பக்கபலமாக இருந்ததாகவும், அதற்காக அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக தெரிவித்தார்.
அண்ணாமலை உடன் மேலும் பல விவகாரங்கள் குறித்தும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிவித்த அவர், அதுகுறித்து விரைவில் தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
இளையராஜா என்பவர் இசை கடவுள், அவர் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அனைவராலும் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. அது எந்த ஜாதியாக இருந்தாலும் பிராமணர்களாக இருந்தாலும் செல்ல முடியாது. அர்ச்சகர்கள் மட்டும் தான் கருவறைக்குள் செல்ல முடியும்.
இளையராஜா கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை. அர்ச்சகர்கள் அவரை ஒரு இடத்தில் நிற்க சொல்கிறார்கள். அதனை திரித்து அவரை கோவில் உள் அனுமதிக்கவில்லை என்ற தவறான செய்தியை பரப்புகிறார்கள். அதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கஸ்தூரி வலியுறுத்தினார்.