MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது பாஜகவின் பிளான்.! அதுக்கு இபிஎஸ் உடந்தை.. புதிய குண்டை தூக்கி போட்ட முன்னாள் நிர்வாகி

அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது பாஜகவின் பிளான்.! அதுக்கு இபிஎஸ் உடந்தை.. புதிய குண்டை தூக்கி போட்ட முன்னாள் நிர்வாகி

தவெக நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த 10, 15 நாட்களாக கட்சியின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. விஜய் வாக்குகளை நன்கு பிரிப்பார் Ballயை ஸ்டாலினிடம் கொடுத்து விடுவார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 18 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அண்ணாமலையை காலி செய்த இபிஎஸ்
Image Credit : Asianet News

அண்ணாமலையை காலி செய்த இபிஎஸ்

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எங்களுடைய கொள்கை கோட்பாடு எல்லாம் மதவாத சக்திகளுக்கு எதிரானது. என்னுடைய அரசியல் பயணமும் பேச்சும் மதவாத சக்தி களுக்கு எதிரானதாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் மதவாத சக்திகள் பாஜகவினர் தான். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவரால் பாஜக வளர்ந்து வந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தற்குறி என்று கூட அண்ணாமலை விமர்சித்ததாகவும் குறிப்பிட்ட அவர் அது பாஜகவிற்கு கெட்ட நேரமாக மாறிவிட்டது. அதனால் அவரை காலி செய்து விட்டார்கள்.

25
அதிமுகவை அழிக்கும் வேலையில் இபிஎஸ்
Image Credit : google

அதிமுகவை அழிக்கும் வேலையில் இபிஎஸ்

பாஜகவின் கணக்கின்படி அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு அதனை செயல்படுத்தி விட்டார்கள். பேரறிஞர் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரெல்லாம் வளர்த்த இயக்கத்தை காலி செய்ய வேண்டும். பாஜகவினர் முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை வைத்து அதில் வெற்றி பெற்று விட்டார்கள் என தெரிவித்தார். இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் யாரும் இங்கு வந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார். திமுக எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேசுவதை காட்டிலும் உடன் இருந்த எனக்குத்தான் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அதிகமாக தெரியும். எனவே அவருக்கு ஆதரவான வாக்குகளையும் இல்லாமல் செய்ய முடியும்.

Related Articles

Related image1
அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!
Related image2
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
35
முதலமைச்சர் யார்?
Image Credit : ADMK

முதலமைச்சர் யார்?

மேலும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சென்று ரோடுரோடாக அலைவதாகவும், ஜெயலலிதா இருந்த பொழுது பாஜகவினர் போயஸ் கார்டன் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும் என்றார். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உடையது இல்லை. பழனிச்சாமி என்னை தேடி வந்து எவ்வளவு தான் அழைத்தாலும் நான் அங்கு செல்ல மாட்டேன். பழனிச்சாமி எங்களுடைய எதிரி என தெரிவித்தார். பழனிச்சாமி முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை என்றும் பழனிசாமியை போன்று ஒரு துரோகியை அரசியலில் யாரும் பார்க்க முடியாது. அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர் பழனிச்சாமி என தெரிவித்தார்.

45
சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு
Image Credit : Asianet News

சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

சி.வி.சண்முகம் நயன்தாரா பற்றி பேசியது பற்றி குறிப்பிட்ட அவர் அது மிகவும் ஒரு கேவலமான அரசியல் அதற்கு கனவு காணுங்கள் என்று குறிப்பிட்ட அப்துல் கலாம் பெயரை உபயோகிப்பதா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும் இவர்களுக்கு நயன்தாரா கேவலமாக போய்விட்டார்களா என்று வினவினார். இது போன்ற ஆட்களை வைத்துக் கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்வதாகவும், இனி அங்க இருப்பவர்களும் ஒவ்வொரு நடிகை ஆக கேட்பார்கள் போல என தெரிவித்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றே தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 10 வருடம் முதலமைச்சராக தொடர்வார்.

55
எஸ்.பி. வேலுமணியும் காலி ஆகிவிடுவார்
Image Credit : Google

எஸ்.பி. வேலுமணியும் காலி ஆகிவிடுவார்

தமிழக வெற்றி கழகம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த 10, 15 நாட்களாக கட்சியின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. விஜய் வாக்குகளை நன்கு பிரிப்பார் Ballயை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து விடுவார், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என தெரிவித்தார். எஸ்.பி. வேலுமணி நல்ல ஒரு Field Worker தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது அனைத்தும் போய்விட்டது என தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பயணம் செய்வதால் எஸ்.பி. வேலுமணியும் காலி ஆகிவிடுவார் என தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
அரசியல்
அதிமுக பாஜக கூட்டணி
திமுக
மு. க. ஸ்டாலின்
அமித் ஷா
Latest Videos
Recommended Stories
Recommended image1
அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!
Recommended image2
சென்னை விமான நிலையத்தில் பெரிய மாற்றம்! ஒரு கேட் மட்டும் – பயணிகளுக்கு சிக்கல்
Recommended image3
முதல்வர் பதவியே கொடுத்தாலும் கூட்டணி இல்லை.. தனித்து தான் போட்டி..! களத்தை அதிரவிடும் தவெக
Related Stories
Recommended image1
அசிங்கமா இல்லையா அண்ணே.. விஜய்யை விடாது கருப்பாய் துரத்தும் பிக் பாஸ் ஜூலி!
Recommended image2
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved