MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கல்யாணம் பண்ணினால் கிரெடிட் ஸ்கோர் அடி வாங்குமா? அது எப்படி?

கல்யாணம் பண்ணினால் கிரெடிட் ஸ்கோர் அடி வாங்குமா? அது எப்படி?

உங்கள் வாழ்க்கைத் துணையின் கடன் சார்ந்த முடிவுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு நிதி சார்ந்த சில ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : SG Balan
Published : Dec 17 2024, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Credit Score Tips

Credit Score Tips

உங்கள் கிரெடிட் ஸ்கோர் உங்கள் நிதிப் பழக்கவழக்கங்களின் பிரதிபலிப்பாகும். ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொண்டதும், கூட்டுக் கிரெடிட் கணக்கிற்குச் மாறினாலோ, கடனை ஒருங்கிணைத்தாலோ உங்கள் வாழ்க்கைத் துணையின் கிரெடிட் ஸ்கோர் உங்கள் ஸ்கோருடன் இணைக்கப்படும்.

இதனால் ஒருவரின் நிதி சார்ந்த முடிவுகள் இன்னொருவரின் கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் செலுத்தும். திருமணத்திற்குப் பின் கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலையில் பராமரிக்க சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Credit Score Tips

Credit Score Tips

ஒரு தம்பதி, வீட்டுக் கடன் போன்ற தேவைகளை முன்னிட்டு கூட்டு கடன் கணக்குகளைத் திறக்கும்போது, ​​அவர்கள் இணைந்து கையொப்பம் இடவேண்டும். இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இருவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது.

39
Credit Score Tips

Credit Score Tips

பொதுவாக, இருவரும் ஒன்றாக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் கிரெடிட் ஸ்கோர் கருத்தில் கொள்ளப்படும். தம்பதியில் ஒருவருக்கு குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வழிவகுக்கும். அல்லது கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பும் குறையலாம்.

49
Credit Score Tips

Credit Score Tips

இருவரும் வலுவான கடன் வரலாறுகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வது, கடன் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, சிறந்த வட்டி விகிதங்களைப் பெறவும் உதவியாக இருக்கும்.

59
Credit Score Tips

Credit Score Tips

வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் சுயவிவரத்தையும் பார்க்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருவரின் பங்களிப்பு விகிதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

69
Credit Score Tips

Credit Score Tips

உதாரணமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஒருவரின் பங்கு 60 சதவீதமாக இருந்தால், அவரது கிரெடிட் ஸ்கோருக்கு அதிக வெயிட்டேஜ் இருக்கும். மாறாக, பங்களிப்பு 25 சதவீதமாக இருந்தால், மோசமான கிரெடிட் ஸ்கோரின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

79
Credit Score Tips

Credit Score Tips

கூட்டு கடன் கணக்குகள் கடன் பயன்பாட்டு விகிதங்களையும் பாதிக்கலாம். அனைத்து கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைகளைப் பொறுத்து இது மாறுபடும். குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம் பொறுப்பான கடன் நடத்தையைக் குறிக்கிறது. மாறாக, இந்த விகிதம் அதிகமாக இருந்தால், அது கடன் மற்றும் நிதி அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கும். இருவரில் ஒருவருக்கு அதிக கடன் பயன்பாட்டு விகிதம் இருந்தாலும், அது இன்னொருவரின் கிரெடிட் ஸ்கோருக்கு எதிர்மறையாக இருக்கலாம்.

89
Credit Score Tips

Credit Score Tips

தம்பதிகள் கூட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, ​​கடன் வழங்கும் நிறுவன அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை செய்யலாம். இது இரண்டு பேரின் கிரெடிட் ஸ்கோரையும் தற்காலிகமாகக் குறைக்கலாம்.

திருமணத்தின் மூலம் பெரும்பாலும் நிதி ஒன்றிணைப்பும் நடக்கிறது. இது கடன் ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும். இதை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும்.

99
Credit Score Tips

Credit Score Tips

கூட்டுக் கடனை நிர்வகிக்க நிதி இலக்குகள் மற்றும் கடன் பழக்கவழக்கங்கள் பற்றி வெளிப்படையாக இருப்பது அவசியம். சேமிப்பு, கடனை அடைத்தல் போன்ற தனிப்பட்ட நிதி நோக்கங்களை விவாதித்து முடிவுசெய்வது நல்லது. கடந்த கால தவறுகள், கடன் வரலாறு பற்றிய தகவல்களை ஒருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
முதலீடு
திருமணம்
தனிநபர் நிதி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved