MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை? சூப்பர் அப்டேட் இதோ!

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை? சூப்பர் அப்டேட் இதோ!

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக ரயிலில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை கொடுக்கப்பட்டு வந்தது. கொரொனா ஓய்ந்து பல ஆண்டுகளாகியும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படவில்லை.

2 Min read
Author : Rayar r
Published : Mar 18 2026, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகை
Image Credit : Google

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகை

ரயில்வே துறை நமது நாட்டின் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக உள்ளது. ரயிலில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில், ரயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை மீண்டும் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக ரயிலில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை கொடுக்கப்பட்டு வந்தது.

24
மூத்த குடிமக்களுக்கு சலுகை என்னென்ன?
Image Credit : gemini and social media

மூத்த குடிமக்களுக்கு சலுகை என்னென்ன?

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் டிக்கெட் சலுகை வழங்கபட்டு வந்தது. ஆனால் கொரொனா கோரத்தாண்டவமாடியதால் நாட்டில் நிலவிய நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த சலுகை நிறுத்தப்பட்டது.கொரொனா ஓய்ந்து பல ஆண்டுகளாகியும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படவில்லை.

Related Articles

Related image1
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கொட்டிக்கிடக்கும் சலுகைகள்.. முழு விபரம் உள்ளே!
Related image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
34
மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்
Image Credit : ANI

மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்

மத்திய பட்ஜெடில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை கொண்டு வரப்படும் என பேச்சு அடிப்பட்டது. ஆனால் அத்தகைய எந்த அறிவிப்பும் வழங்காமல் மூத்த குடிமக்களை மத்திய அரசு ஏமாற்றியது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கு மீன்டும் ரயிலில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

கொரொனா பெருந்தொற்றின் போது நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று மக்களவையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதமும், ஆண் மூத்த குடிமக்களுக்கு 40 சதவீதமும் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

44
இன்ப அதிர்ச்சி அளிக்குமா ரயில்வே?
Image Credit : social media

இன்ப அதிர்ச்சி அளிக்குமா ரயில்வே?

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இதனை உடனடியாக அமல்படுத்துமாறு ரயில்வே அமைச்சரை வலியுறுத்தியுள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள், ''ரயில் கட்டணச் சலுகையை நிறுத்தி வைக்கும் முடிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக முதியவர்களுக்கும் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் வழங்கப்படும் சலுகைகள் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பதை ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மூத்த குடிமக்களின் மனம் குளிரும்படியான அறிவிப்பை ரயில்வே வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் பயணச்சீட்டு
மூத்த குடிமக்கள்
இந்திய இரயில்வே
Latest Videos
Recommended Stories
Recommended image1
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
Recommended image2
Flight Rules: இனி விமானத்தில் கூடுதல் கட்டணம் இல்லை, குடும்பத்தோடு ஒண்ணா உட்காரலாம்! 5 புதிய விதிகள்
Recommended image3
இந்த தவறை பண்ணாதீங்க.. 200% அபராதம் உறுதி.. வரி செலுத்துவோர் கவனத்திற்கு
Related Stories
Recommended image1
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கொட்டிக்கிடக்கும் சலுகைகள்.. முழு விபரம் உள்ளே!
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved