MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கொட்டிக்கிடக்கும் சலுகைகள்.. முழு விபரம் உள்ளே!

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கொட்டிக்கிடக்கும் சலுகைகள்.. முழு விபரம் உள்ளே!

Indian Railways Senior Citizen Benefits: ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன சலுகைகள் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 10 2026, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்
Image Credit : Asianet News

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்

இந்தியாவின் போக்குவரத்தில் ரயில்வே துறை உயிர்நாடியாக உள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் எனப்படும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பானதாக மாற்றவும் பல்வேறு பிரத்யேக வசதிகளை ரயில்வே செய்து கொடுத்துள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

25
1. லோயர் பெர்த் முன்னுரிமை
Image Credit : gemini and social media

1. லோயர் பெர்த் முன்னுரிமை

ரயிலில் ஏறுவதிலும், மேல் இருக்கைகளுக்குச் செல்வதிலும் முதியவர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. ஆகையால் 60 வயது கடந்த ஆண்கள் மற்றும் 58 வயது கடந்த பெண்களுக்கு ஸ்லீப்பர் (Sleeper) மற்றும் ஏசி பெட்டிகளில் (2A, 3A) கீழ் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. 

ஒருவேளை முன்பதிவின் போது கீழ் இருக்கை கிடைக்காவிட்டாலும், பயணத்தின் போது காலியாக இருந்தால் டிக்கெட் பரிசோதகர் (TTE) மூலம் அதை முதியவர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பாதிக் கட்டணம்?.. அறிவிப்பு வெளியாகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!
Related image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
35
2. நெரிசலற்ற டிக்கெட் முன்பதிவு
Image Credit : Asianet News

2. நெரிசலற்ற டிக்கெட் முன்பதிவு

முதியவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமப்படக் கூடாது என்பதற்காக, முக்கிய ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் எவ்வித அலைச்சலும் இன்றி விரைவாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

3. சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர்கள்

நடக்க இயலாத அல்லது உடல்நலம் குன்றிய பெரியவர்களுக்காகப் பெரிய ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி (Wheelchair) வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு உதவ போர்ட்டர் சேவைகளும் உண்டு. இதை முன்கூட்டியே ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது.

45
4. பிளாட்பார பயணத்திற்கு பேட்டரி கார்கள்
Image Credit : AI

4. பிளாட்பார பயணத்திற்கு பேட்டரி கார்கள்

பெரிய ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்குச் செல்வது முதியவர்களுக்கு சவாலான காரியம். இதற்காகவே பேட்டரி மூலம் இயங்கும் சிறிய வாகனங்கள் (Golf Carts) இயக்கப்படுகின்றன. இந்த வசதி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும்.

55
5. புறநகர் ரயில்களில் தனி இட ஒதுக்கீடு
Image Credit : Indian Railway

5. புறநகர் ரயில்களில் தனி இட ஒதுக்கீடு

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இயக்கப்படும் லோக்கல் ரயில்களில், மூத்த குடிமக்களுக்கென தனியான இருக்கைகள் (Reserved Seats) ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அலுவலக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்காமல் அவர்கள் நிம்மதியாக பயணிக்க முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள் பயணச்சீட்டு
ரயில் டிக்கெட் முன்பதிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பேங்க் அக்கவுண்ட்டில் ரூ.2000 எப்போது கிடைக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
Recommended image2
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வரப்போகுது.! கவலை வேண்டாம்.! இந்த 5 மாற்றுவழி இருக்கு.!
Recommended image3
நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!
Related Stories
Recommended image1
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பாதிக் கட்டணம்?.. அறிவிப்பு வெளியாகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image2
மூத்த குடிமக்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு.. இனி நிம்மதியாக உறங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved