MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பாதிக் கட்டணம்?.. அறிவிப்பு வெளியாகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பாதிக் கட்டணம்?.. அறிவிப்பு வெளியாகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்!

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக ரயிலில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை கொடுக்கப்பட்டு வந்தது. கொரொனா வந்தபோது நாட்டில் நிலவிய நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

1 Min read
Author : Rayar r
Published : Feb 22 2026, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியன் ரயில்வே அளிக்கும் சலுகை
Image Credit : stockPhoto

இந்தியன் ரயில்வே அளிக்கும் சலுகை

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக விளங்கி வரும் நிலையில், ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அதுவும் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த், சக்கர நாற்காலி, டிக்கெட் கவுண்ட்டர்களில் தனி வரிசை என பல்வேறு சலுகைகளில் கொடுக்கப்படுகின்றன.

24
மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணம்
Image Credit : gemini and social media

மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணம்

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக ரயிலில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை கொடுக்கப்பட்டு வந்தது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா வந்ததால் நிலைமை தலைகீழாக மாறியது. நாட்டில் நிலவிய நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

Related Articles

Related image1
கடைசி நேர டென்ஷன் இனி இல்லை.. ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? இதோ எளிய வழி!
Related image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
34
பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை
Image Credit : Asianet News

பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை

கொரொனா ஓய்ந்து இத்தனை ஆண்டு காலமாகியும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படவில்லை. மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை கொண்டு வருவது தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகின. ஆனால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் குறித்து பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

44
மத்திய அரசு கூறியது என்ன?
Image Credit : Asianet News

மத்திய அரசு கூறியது என்ன?

அப்போது விளக்கம் அளித்த மத்திய அரசு, 'ரயில்களில் ஏற்கெனவே பயணிகளுக்கு சலுகை தான் வழங்கப்பட்டு வருகிறது. கட்டணம் குறைவாகத்தான் உள்ளது. மூத்த குடிமக்களுக்கு சலுகையை மீண்டும் கொண்டு வருவது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்'' என்று கூறியிருந்தது. ஆனாலும் மத்திய அரசும், ரயில்வே வாரியமும் இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மீண்டும் சலுகை அறிவிப்பு எப்போது?

ரயில்வே வாரியத்தின் கூட்டம் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாகவும், அப்போது மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகே மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து தெரியவரும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் பயணச்சீட்டு
மூத்த குடிமக்கள்
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்!.. ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்!..
Recommended image2
ஏப்ரல் 1 முதல் டோல் விதிமுறையில் மாற்றம்.. டபுள் கட்டணம்.. பயணிகள் கவனத்திற்கு
Recommended image3
ஹோலிக்கு முன் 60% சம்பள உயர்வா.? அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் ஜாக்பாட்.. டிஏ வேற இருக்கு
Related Stories
Recommended image1
கடைசி நேர டென்ஷன் இனி இல்லை.. ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? இதோ எளிய வழி!
Recommended image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved