- Home
- Business
- பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
இந்திய ரயில்வே Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்த சலுகையை எப்படி பெறுவது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியன் ரயில்வே சலுகை
இந்தியாவில் ஏழைகளின் ரதமாக ரயில் போக்குவரத்து உள்ளது. குறைந்த கட்டணத்தில் தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
ரயிலில் முன்பதிவு பெட்டிகள் மட்டுமின்றி முன்பதிவில்லாத (Unreserved ) பெட்டிகளிலும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக தினமும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் முன்பதில்லாத பெட்டிகளில் பயணிக்கின்றனர்.
ரயில் Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி
ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே குட்நியூஸ் சொல்லியுள்ளது. அதாவது Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடியை ரயில்வே வழங்கி வருகிறது. ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்தியன் ரயில்வே ரயில் ஒன் (Rail One) என்ற மொபைல் செயலியை கொண்டு வந்துள்ளது.
சலுகை எப்போது வரை நடைமுறையில் இருக்கும்?
இந்த செயலி மூலமாக அன்ரிசர்வுடு டிக்கெட் புக் செய்பவர்கள் மட்டுமே 3% தள்ளுபடி பெற முடியும். இந்த சலுகை கடந்த மாதம் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கியது. ஜுலை 14ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
ரயில் ஒன் செயலியில் ஜிபே, பேடிஎம், பேன் பே என எந்த UPI பயன்படுத்தியும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிக் வாயிலாகவும் Unreserved டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி பெற முடியும்.
இந்த தள்ளுபடி சலுகை ரயில் ஒன் செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே உண்டு. ரயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் கவுண்ட்டர்களில் Unreserved டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Rail One செயலியில் தள்ளுபடி பெறுவது எப்படி?
ரயில் ஒன் செயலியில் Unreserved டிக்கெட்டுகள் எப்படி எடுக்க வேண்டும்? எப்படி தள்ளுபடி பெறலாம்? என்பது குறித்து படிப்படியாக காணலாம்.
1. உங்கள் மொபைலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் சென்று ரயில் ஒன் (Rail One)
செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.
2. பின்பு ரயில் ஒன் செயலியில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு புதிய கணக்கு தொடங்கலாம். இல்லையெனில் நீங்கள் ஏற்கெனவே UTS செயலியில் பயன்படுத்தி வந்த User Name மற்றும் Password பயன்படுத்தியும் உள் நுழையலாம்.
3. பின்னர் ரயில் ஒன் செயலியில் அன்ரிசர்வுடு டிக்கெட் (Unreserved Ticket) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து எங்கிருந்து எங்கே என பயண விவரங்களை உள்ளிட்டு பணம் செலுத்தும் ஆப்ஷனுக்கு (Payment) செல்லவும்.
4. அங்கு UPI அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக பணம் செலுத்தும்போது மொத்தத் தொகையில் 3% தள்ளுபடி தானாகவே கழிக்கப்பட்டு மீதித் தொகை உங்களுக்கு காட்டும். அந்த தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

