11:13 PM (IST) Jul 17

தலைமைச் செயலகத்தில் சோதனை?

தலைமைச் செயலகத்தில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறைக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல். நாளை தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்படவும் வாய்ப்பு.

11:05 PM (IST) Jul 17

அமைச்சர் பொன்முடி வீட்டில் விசாரணை முடிந்தது

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்துவந்த அமலாக்கத்துறை சோதனை முடிவுக்கு வந்திருக்கிறது.

09:20 PM (IST) Jul 17

கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை! ஏன்.. எதற்காக? காரணம் தெரியுமா?

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும், செல்போன் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டது. மேலும் படிக்க 

09:03 PM (IST) Jul 17

அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர் பொன்முடி!

சென்னையில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இன்று காலை முதல் 13 மணிநேரமாக விசாரணை நடத்திவந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

Scroll to load tweet…
06:24 PM (IST) Jul 17

கத்தி.. துப்பாக்கி.. புல்லட்டு எல்லாம் பறக்குது! மாஸாக வெளியாகி மெர்சல் செய்த 'ஹுக்கும்' லிரிகள் பாடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் இருந்து 'ஹுக்கும்' செகண்ட் சிங்கிள் லிரிகள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
வீடியோவை பார்க்க 

06:10 PM (IST) Jul 17

தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் பேரணி, புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது

05:44 PM (IST) Jul 17

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு வாரியம்!

தமிழ்நாட்டில் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

05:11 PM (IST) Jul 17

புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

03:34 PM (IST) Jul 17

பெண் விவசாயிகளுடன் நடனம் ஆடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.. வைரல் வீடியோ !!

காங்கிரஸ் தலைவர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் சோனியா காந்தி பெண் விவசாயிகளுடன் நடனமாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

02:18 PM (IST) Jul 17

Vande Bharat Express : வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பயணிகள் - என்ன நடந்தது? முழு பின்னணி

போபால் டூ டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

01:57 PM (IST) Jul 17

கார்கில் நினைவு தினம்: புல்லட்டில் புறப்படும் வீராங்கனைகள்!

கார்கில் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், முப்படைகளை சேர்ந்த வீராங்கனைகள் டெல்லியில் இருந்து கார்கில் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணியாக செல்லவுள்ளனர்

01:54 PM (IST) Jul 17

அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வந்த Swiggy டெலிவரி.. நான் டெலிவரி பண்ண வந்தேன் - அதிர்ச்சி சம்பவம்

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

01:16 PM (IST) Jul 17

அம்மா அம்மா என கதறிய குழந்தைகள்!!

கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் சிக்கி மனைவி உயிரிழந்த பரிதாபகர சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது

01:15 PM (IST) Jul 17

மோடி மட்டும் போதுமே எதுக்கு 30 கட்சிகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்

01:13 PM (IST) Jul 17

15 பெண்களை ஏமாற்றிய பிக்பாஸ் பிரபலம் விக்ரமன்.. வெளியான போட்டோ - ஆக்சன் எடுத்த விசிக

பிக்பாஸ் பிரபலமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் மீதான புகாரை விசாரிக்க குழு அமைத்துள்ளது விசிக.

12:46 PM (IST) Jul 17

போர்ட் பிளேயர்: வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலைய முனையத்தை ஜூலை 18ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி புதிய வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலைய முனைய கட்டிடத்தை ஜூலை 18 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

10:51 AM (IST) Jul 17

அமைச்சர் பொன்முடி ரெய்டு: கூட்டணி கட்சிகள் கண்டனம்; அதிமுக, பாஜக வரவேற்பு!

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

10:46 AM (IST) Jul 17

Today Gold Rate in Chennai : ஆடி தொடக்கமே அமோகம்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

10:28 AM (IST) Jul 17

அமைச்சர் பொன்முடி மகன் தொடர்புடைய இடங்களில் சோதனை

அமைச்சர் பொன்முடியின் சென்னை வீடு,அலுவலகம், விழுப்புரம் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம் சிகாமணி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

10:28 AM (IST) Jul 17

11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு - அமலாக்கத்துறை சோதனை

11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.