கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை! ஏன்.. எதற்காக? காரணம் தெரியுமா?

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும், செல்போன் பயன்படுத்த கர்நாடகா மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டது.
 

Prohibition of cell phone use inside temples Do you know the reason?

நாட்டின் பல்வேறு கோவில்களுக்குள் கேமரா எடுத்து செல்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன் பயன்படுத்தவும்  தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கர்நாடகா அரசு இதற்கான உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளது .

கோயில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதால், அமைதியை தேடி கோவில்களுக்கு வரும்  மற்ற பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவது போல் உள்ளது என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Prohibition of cell phone use inside temples Do you know the reason?

இனி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து, கோயில்களுக்குள் செல்லும் போது பக்தர்கள் அவர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு ஆன்மீகம் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Prohibition of cell phone use inside temples Do you know the reason?

கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன்கள் அனுமதிக்கப்படாது, தடை குறித்து பார்வையாளர்களுக்கு தெரிவிக்க அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும். சிலைகளை புகைப்படம் எடுக்க ஃபோன்களை தவறாகப் பயன்படுத்துதல், பாதுகாப்பு,  திருட்டுகளுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. திருமலை கோவிலில் ஏற்கனவே இந்த தடை அமலில் இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios