15 பெண்களை ஏமாற்றிய பிக்பாஸ் பிரபலம் விக்ரமன்.. வெளியான போட்டோ - ஆக்சன் எடுத்த விசிக
பிக்பாஸ் பிரபலமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் மீதான புகாரை விசாரிக்க குழு அமைத்துள்ளது விசிக.
பிக் பாஸ் சீசன் 6-ல் பங்கேற்று மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானவர் விக்ரமன். பல அரசியல் விவாதங்கள், அரசியல் முற்போக்கு தத்துவங்கள் பேசும் இவர் பிக் பாஸ் சீசன் 6ல் ரசிகர்களின் பேராதரவுடன் 2 வது இடத்தை பிடித்தார்.தற்போது விக்ரமன் காதல் என்ற பெயரில் பல லட்ச கணக்கில் தன்னிடம் இருந்து காசு பெற்று ஏமாற்றிவிட்டதாக சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான கிருபை முனுசாமி என்ற பெண் சரமாரியாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
லண்டனில் Law-வில் டாக்டரேட் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர் அடுத்தடுத்த ஆதாரங்களுடன் விக்ரமன் தன்னை 3 ஆண்டு காலமாக ஏமாற்றி வந்துள்ளதாக தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பல முறை தன்னை ஜாதி ரீதியில் கொச்சை படுத்தி பேசியதாகவும், பணத்தை கேட்டு தனி டார்ச்சர் செய்ததாகவும் அவர்கள் செய்து கொண்ட மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகிறார்.
மேலும் ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச், எர் பாட்ஸ், அனைத்தும் தன மூலம் பெற்றுக் கொண்டதாகவும், யூடியூப் சேனல் தொடங்க லேப்டாப் வேண்டும் என்று தன்னை வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கிருபா. மேலும், மேனேஜர் பெண்ணுடன் தொடர்பில் இருந்து தன்னை ஏமாற்றியாதகாவும், 15 க்கும் மேற்பட்ட பெண்கள் விக்ரமனால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் கிருபா.
விக்ரமன் மீது நான் புகார் கொடுக்க போவதாக கூறினேன். இதனை அடுத்து உனக்கு சின்ன ஆட்களை மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளது என்று கூறி என்னை மிரட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவையும் கேட்டார். இதனால் நான் அவருக்கு எதிராக 20 பக்க புகாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் கொடுத்திருந்தேன். இது குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை திருமாவளவன் அமைத்தார். 20 நாட்களில் இதனை விசாரித்து அறிக்கையை தர சொன்னார்.
காதலித்து ஏமாற்றுவது, முறைகேடு, நிதி மோசடி ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவண ஆதாரங்கள், 8 சாட்சி ஆதாரங்களை இதில் நான் அளித்து இருந்தேன். ஆனால் இந்த குழு தனது அறிக்கையை சமர்பிக்க 40 நாட்கள் எடுத்து கொண்டது. ஒரு மாதம் கழித்தும் அறிக்கை குறித்த நகல் எனக்கு கொடுக்கப்படவே இல்லை. நான் ஒருமாதம் இடைவிடாமல் முயன்று வருகிறேன். குழு உறுப்பினர்கள் என்னிடம் அறிக்கையை கொடுக்கவே இல்லை. அலுவலக பணியாளர்கள் இது குறித்து பேசவே பயப்படுகிறார்கள். இந்த அறிக்கையை பற்றி பகிர பயப்படுகிறார்கள்.
அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக அறிய முடிகிறது. அதனால்தான் திருமாவளவன் என்னிடம் விக்ரமன் குறித்த அறிக்கையை காட்டாமல் உள்ளாரா?, என்னை பல்வேறு வகைகளில் விக்ரமன் ஏமாற்றி உள்ளார். ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட் என்று வாங்கியவை என்னிடம் இருந்து சுரண்டப்பட்டது. அதுமட்டுமின்றி, யூடியூப் சேனல் நடத்தப்போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கிதரும்படி விக்ரமன் தொல்லை கொடுத்தார்.
ஆனால் அவர் அதை தொடங்க கூட இல்லை. விக்ரமன் தனது சொந்த காருக்கான டவுன் பேமெண்ட் மற்றும் இ.எம்.ஐகளை என்னிடம் இருந்து கட்டயப்படுத்தி வாங்கி கொண்டார் என கிருபா முனுசாமி புகார் கூறி உள்ளார். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கட்சியின் இணை செயலாளர் விக்ரமன் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !