Vande Bharat Express : வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பயணிகள் - என்ன நடந்தது? முழு பின்னணி
போபால் டூ டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இந்த ரயிலில் வேகம் அதிகமாக இருக்கும். புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும்.
இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி, எல்லாவற்றுக்கும் மேல் பாதுகாப்பு இருக்கிறது. தொலைதூர ஊர்களுக்கு இந்த வந்தே பாரத் ரயில் வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று போபால்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியில் உள்ள பேட்டரி பெட்டி இன்று காலை தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ
காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள குர்வாய் கெத்தோரா நிலையத்தில் காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த ரயில் போபாலில் இருந்து காலை 5.40 மணியளவில் புறப்பட்டு, டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தை மதியம் 1.10 மணியளவில் சென்றடைகிறது.
அந்த இடத்தில் இருந்து காட்சிகள் சக்கரங்களுக்கு அருகில் இருந்து புகை வெளியேறுவதைக் காட்டியது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததைத் தொடர்ந்து, உரிய பரிசோதனை தொடங்கியது. தீ, பேட்டரி பெட்டியில் மட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்ப தேர்வு முடிந்தவுடன் ரயில் தலைநகர் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின்படி, கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையில், வந்தே பாரத் ரயில்களில் விலங்குகள் மோதி 68 விபத்துக்கள் நடந்துள்ளன. ரயிலின் மீது கற்கள் வீசப்பட்ட பல சம்பவங்கள் தலைப்புச் செய்திகளிலும் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பயணிகளிடத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !