சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு புத்தகம்... வெளியிட்டார் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்!!

"முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்டதோடு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். 

chennai commissioner shankar jiwal released awareness book to prevent cyber crimes

"முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்டதோடு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். இணையவழி சைபர் குற்றங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இணையவழி சைபர் குற்றவாளிகள் கையாளும் முறைகளை பற்றிய தெளிவும், போதிய விழிப்புணர்வும் இல்லாததால், அவர்கள் விரிக்கும் குற்ற வலை பின்னல்களில் மக்கள் மாட்டிக் கொண்டு தங்களது பணத்தை இழக்கின்றனர்.

இதையும் படிங்க: கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழப்பு… வெளியானது பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

ஆகவே, பொதுமக்களை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றவும், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பெறவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தற்போதைய நடைமுறையில் உள்ள 30 சைபர் குற்ற செயல்முறைகள் குறித்து எளிதில் புரியும்படியான விளக்கப்படங்களுடன் கூடிய "முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற பெயரில் புத்தகம் தயாரிக்கப்பட்டது. அந்த புத்தகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (08.11.2022) வேப்பேரி காவல் ஆணையரகத்தில் வெளியிட்டார்.

புத்தகம்: "முத்துவும் முப்பது திருடர்களும்" - கிளிக் செய்து படித்து பயன்பெறவும்

இந்த சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை பொதுமக்கள் அனைவரும் படித்து, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சைபர் விழிப்புணர்வு புத்தகத்தை QR Code மூலமாகவும், இணையவழி Link மூலமாகவும். கணினி, செல்போன் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கலுக்கு முன்பு ரேஷன் கடை காலிபணியிடங்கள் நிரப்பப்படும்… அறிவித்தது தமிழக அரசு!!

அதை தொடர்ந்து பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்-1 G.நாகஜோதி, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் D.V.கிரண் சுருதி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் முத்துகுமார், (வங்கி மோசடி புலனாய்வு பிரிவு), சைபர் கிரைம் உதவி ஆணையாளர் கிருத்திகா, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 60 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios