வெள்ள பாதிப்பு; நம்பிய மக்களை கைவிட்ட அரசு - பொரிந்து தள்ளிய தளபதி விஜய்!
TVK Vijay : இன்று பனையூரில் மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய த.வெ.க தலைவர் விஜய், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சியாளர்களை சரமாரியாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் கடந்து சில நாட்களாகவே பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. புயல் கரையை கடந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டது என்றாலும், பரவலாக நல்ல மழை பெய்து வருவதோடு ஆங்காங்கே இன்னும் வெள்ள நீர் வடியாமலே இருந்து வருகிறது. திருவண்ணாமலையில் கனத்த மழையால் ஏற்பட்ட நிலச் செலவில் சிக்கி, 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசிடம் 2000 கோடி ரூபாய் நிதி கேட்டு மாநில அரசிடமிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பேருந்துகள் மூலம் பனையூருக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி அவர்களோடு உரையாடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய். ஆனால் தளபதி விஜய் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று, களத்தில் நின்று இந்த விஷயங்களை செய்திருக்க வேண்டும் என்று ஒரு சாரார் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவருடைய ரசிகர்கள், மக்களை தனது சொந்த செலவில் தான் விஜய் அழைத்து சென்றிருக்கிறார் என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கனமழையால் தவிக்கும் மக்கள்; TVK தலைவர் விஜய் எங்கே போனார்? குமுறும் பிரபலம்!
இப்படிப்பட்ட சூழலில் தங்களை நம்பிய மக்களை ஆட்சியாளர்கள் கைவிட்டு விட்டதாக கூறி ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார் தளபதி விஜய். சற்று முன் தளபதி விஜய் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்....
"புயல் என்பது பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்குகின்ற ஒரு இயற்கை சீற்றம் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் எவ்வளவு பெரிய இயற்கை பேரிடராக இருந்தாலும், நம்மை காக்க நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு நம்மோடு இருக்கின்றது. ஆட்சி பீடத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்".
"ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களை கைவிடும் என்பதை இப்போது மக்கள் அனுபவித்து உணரும்பொழுது அவர்களுடைய துயரை வார்த்தையால் வர்ணிக்க முடியாமல் போகிறது. ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர வைத்து அழகு பார்த்த மக்களை பாதுகாக்க முறையான திட்டங்களில் தீட்டப்படவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூட செய்யாமல் அவர்களை பரிதாப நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது?".
"கடந்த பல ஆண்டுகளாகவே நமது நற்பணி மன்றங்கள் மூலமாகவும், மக்கள் இயக்கங்கள் மூலமாகவும் இயன்ற அளவில் நாம் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறோம். மக்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்திருக்கிறோம். நம் சேவை உணர்வால் அவர்கள் அனைவரோடும் உறவுகளாக பழகியவர்கள் நாம். ஆகவே என் நெஞ்சில் குடியிருக்கும் கழக தோழர்கள், பாதுகாப்பான முறையில் மக்களுக்கு பணி செய்திட வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார் விஜய்.
கார்த்திகை மாதத்தில் பத்திர பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!