MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிஆர்பி-யில் நம்பர் 1; கெத்து காட்டிய சுந்தரி! இந்த வார டாப் 10 சீரியல்கள் என்னென்னெ?

டிஆர்பி-யில் நம்பர் 1; கெத்து காட்டிய சுந்தரி! இந்த வார டாப் 10 சீரியல்கள் என்னென்னெ?

Top 10 Tamil Serial : சன் டிவியில் அண்மையில் முடிவடைந்த சுந்தரி சீரியல், டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 12 2024, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
serial TRP

serial TRP

2024-ம் ஆண்டின் 49வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. இதில் பாக்கியலட்சுமி சீரியல் 10-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 9ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.09 டிஆர்பி புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு இடம் பின் தங்கி, 6.32 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது. சரிவை சந்தித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 7.64 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

24
Top 10 Serial

Top 10 Serial

எஞ்சியுள்ள 7 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பாக கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் மளமளவென பின்னுக்கு தள்ளப்பட்டு 7வது இடத்தில் உள்ளது. இதற்கு 8.45 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக 8.55 புள்ளிகளுடன் இராமாயணம் தொடர் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. சன் டிவியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் புது சீரியலான அன்னம் 8.69 புள்ளிகளுடன் 5-ம் இடத்தை பிடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஆண்டாளாக வந்து ஆண்டனிக்கு கழுத்தை நீட்டிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

34
Top 10 Serial TRP Rating

Top 10 Serial TRP Rating

முதல் நான்கு இடங்கள் அதிரடி மாற்றத்தை கண்டுள்ளன. அதன்படி கடந்த வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.16 புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல், இந்த வாரம் 9.26 புள்ளிகளுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 9.60 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

44
Sundari Serial TRP

Sundari Serial TRP

இந்த பட்டியலில் முதல் இடத்தை எப்போதும் கயல், அல்லது சிங்கப்பெண்ணே ஆகிய சீரியல்கள் பிடித்து வந்த நிலையில், இந்த வாரம் சுந்தரி சீரியல் பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 10.08 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. சுந்தரி சீரியல் கடந்த வாரத்துடன் முடிவடைந்ததால் அதன் கிளைமேக்ஸை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி இருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. முதலிடத்தோடு கெத்தாக முடிவடைந்த சீரியல் என்கிற பெருமையை சுந்தரி சீரியல் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... 7300 கோடி சொத்துக்கு அதிபதி; 2024-ல் இந்தியாவிலேயே பணக்கார நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
Recommended image2
இயக்குநர், நடிகர்.. இப்போ தயாரிப்பாளர்! பிரதீப் ரங்கநாதனின் 'வேற லெவல்' அவதாரம்! படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?
Recommended image3
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved