7300 கோடி சொத்துக்கு அதிபதி; 2024-ல் இந்தியாவிலேயே பணக்கார நடிகர் யார் தெரியுமா?
Richest Actor in India : 2024-ம் ஆண்டு இந்தியாவிலேயே அதிக சொத்துக்களை கொண்ட பணக்கார நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Richest actor in India
இன்றைய சூழலில் சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் சோசியல் மீடியா மூலம் வைரல் ஆனால் போதும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. சினிமா வாய்ப்பு தேடி சொந்த ஊரைவிட்டு வந்தவர் ஏராளம், ஆனால் அவர்களில் சினிமாவில் சாதித்தவர்கள் வெகு சிலரே. அப்படி சிறு வயதிலேயே சினிமா ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்து தங்க இடமின்றி பிளாட்பாரத்தில் தூங்கிய ஒருவர் இன்று 7300 கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் தான் ஷாருக்கான்.
shah rukh khan
ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக பாலிவுட்டில் பணக்கார நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஜூகி சாவ்லா, ஹிருத்திக் ரோஷன், அமிதாப் பச்சன் மற்றும் கரண் ஜோஹர். இதில் ஜூகி சாவ்லாவின் சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 600 கோடியாம். அதேபோல் ஹிருத்திக் ரோஷன் 2000 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு 1600 கோடி சொத்துக்கள் உள்ளன. தயாரிப்பாளர் கரண் ஜோஹர் 1400 கோடி சொத்துக்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வசூலில் மிரளவைத்த டாப் 5 படங்கள்!
shah rukh khan Salary
ஷாருக்கானுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களும் சினிமாவில் வந்ததில்லை. அவர் சினிமாவை தாண்டி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இந்தியாவில் அல்லு அர்ஜுன், விஜய்க்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். இவர் தன் மனைவி கெளரி கான் உடன் இணைந்து ரெட் சில்லீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
shah rukh khan Net Worth
ஐபிஎல்லில் மூன்றாவது மிகப்பெரிய பிரான்சைஸாக கருதப்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் ஷாருக்கான். இந்த அணியின் மதிப்பு சுமார் 1800 கோடி. இந்த அணி இதுவரை மூன்று முறை டைட்டிலை ஜெயித்துள்ளது. அதேபோல் விளம்பரங்களிலும் அதிகளவில் நடிக்கும் ஷாருக்கான். அதற்காக ரூ.ம் முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 2024-ல் அதிக சொத்துக்களை கொண்ட இந்திய நடிகர் என்கிற பெருமையையும் ஷாருக்கான் பெற்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2-வுக்கு முன் 1000 கோடி வசூல் அள்ளிய படங்கள் என்னென்ன? முழு பட்டியல் இதோ