MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வசூலில் மிரளவைத்த டாப் 5 படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வசூலில் மிரளவைத்த டாப் 5 படங்கள்!

இன்று தன்னுடைய 74- வது பிறந்த நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாடி வரும் நிலையில், இவர் நடித்து வசூலில் அதிர வைத்த ஐந்து திரைப்படங்கள் குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

4 Min read
Author : manimegalai a
Published : Dec 12 2024, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Rajinikanth Special Article

Rajinikanth Special Article

கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கன்டெக்டராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நண்பரின் துணையோடும், குடும்பத்தினர் ஆதரவோடும் சென்னைக்கு வந்து... அடையாரில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில்  படித்து முன்னணி நடிகராக மாறியவர். இவர் படிக்கும் காலங்களில் பட்ட கஷ்டங்களும், வாய்ப்புக்காக நடத்திய போராட்டமும் தான் ரஜினிகாந்தை திரை உலகின் உச்சத்தில் உயர்த்தி அழகு பார்த்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Rajinikanth Birthday Special

Rajinikanth Birthday Special

திரையுலக வாழ்க்கையிலும் சரி, பர்சனல் வாழ்க்கையிலும் சரி, என்றுமே சூப்பர் ஸ்டாருக்கு மிஸ்டர் பர்ஃபெக்ட் என்கிற பெயரே கிடைத்துள்ளது. அதேபோல் சக நடிகர் தன்னைவிட வயது குறைந்தவர்  என்றாலும் அவருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர் ரஜினிகாந்த். இதனை பல நடிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய ரஜினிகாந்த், இதைத் தொடர்ந்து மூன்று முடிச்சு, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், காயத்ரி, போன்ற பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரமே கிடைத்தாலும், தன்னுடைய ஸ்டைலால் ரசிகர்கள் மனதை கவர்ந்து ஹீரோவாக மாறினார். தற்போதைய இளம் நடிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்படும் அளவுக்கு ரஜினியின் திரை உலக ஆதிக்கம் உள்ளது.

புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் மற்றொரு மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

38
Rajinikanth Coolie Movie

Rajinikanth Coolie Movie

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும், 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. அவ்வப்போது இவர் நடிக்கும் படங்களின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரஜினிகாந்த நடித்து வசூலில் பட்டையை கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

48
Karthik Subburaj and Rajinikanth Movie Collection

Karthik Subburaj and Rajinikanth Movie Collection

பேட்ட:

நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை திரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்தார். மற்றொரு கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகர் சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ரூ.160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.223 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

58
Pa Ranjith and Rajinikanth Kabali Movie

Pa Ranjith and Rajinikanth Kabali Movie

கபாலி:

அட்டகத்தி, மெட்ராஸ், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் கபாலி. கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இவருடைய குரல் இந்த படத்தில் ஒலித்தது. ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க, தன்ஷிகா ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும்... மற்றொரு தரப்பினர் இந்த படத்திற்கு கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.295 கோடி வசூலை குவித்து, நான்காவது இடத்தில் உள்ளது.
 

68
Rajinikanth and Director Shankar Enthiran Movie Collection

Rajinikanth and Director Shankar Enthiran Movie Collection

எந்திரன்:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் திரைப்படம் 'எந்திரன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையில், இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் தற்போது வரை அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்யும் ரோபோ எப்படி அவருக்கு எதிராகவே திரும்புகிறது. அவருடைய காதலியே கடத்தி வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுகிறது என கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கி, ஹிட் கொடுத்திருந்தார் ஷங்கர். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.290 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

மறைந்த பின்னரும் மனைவிக்கு மரியாதை; கோவில் கட்டி கொண்டாட போகும் மதுரை முத்து!
 

78
Shankar and Rajinikanth 2.o Movie Collection

Shankar and Rajinikanth 2.o Movie Collection

2.ஓ:

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான திரைப்படம் தான் 2.0. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாகவும் - அக்ஷய் குமார் வில்லனாகவும் நடித்திருந்தனர். நவீன யுகத்தில் பயன்படுத்தப்படும் போன்கள், அதன் மூலம் வெளியாகும் ஒளி கதிர்களால் பறவைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை... இந்த படத்தின் மூலம் தன்னுடைய பிரமாண்ட படைப்பில் எடுத்துக் கூறி இருந்தார் இயக்குனர் சங்கர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து, நான்காவது இடத்தில் உள்ளது.

88
Nelson Dilip kumar And Rajinikanth Jailer movie

Nelson Dilip kumar And Rajinikanth Jailer movie

ஜெயிலர்:

ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. ஓய்வு பெற்ற ஜெயிலர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த நிலையில், இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கலாநிதிமாறன் இப்படத்தை தயாரித்திருந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். தமன்னா ஒரே ஒரு பாடலில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தார். மேலும் ரஜினிகாந்த் மகானாக நடிகர் வசந்த் ரவி நடிக்க, மிர்னா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். யோகி பாபு, சுனில், மோகன்லால், சிவராஜ்குமா,ர் ஜாக்கி ஷெரிப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவான அதிரடி ஆக்சன் கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.650 கோடி வசூல் சாதனை படைத்தது. அதிகம் வசூல் செய்த ரஜினிகாந்த் படங்களில் முதல் இடத்தை இப்படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'சூர்யா 45' படத்தில் ரூ.100 கோடி வசூல் மன்னனை கேமியோ ரோலில் களமிறக்கும் ஆர்.ஜே.பாலாஜி!

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(19.2 ov)148/9
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(39.5 ov) 98 & 135/5
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved