'சூர்யா 45' படத்தில் ரூ.100 கோடி வசூல் மன்னனை கேமியோ ரோலில் களமிறக்கும் ஆர்.ஜே.பாலாஜி!
சூர்யா 45 படத்தில், கேமியோ ரோலில் பிரபல டாப் ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Suriya 45 Movie Update
சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்ததாக இவர் நடித்து வரும் 45-ஆவது படத்தின், அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த திரைப்படத்தின் கதாநாயகன், கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
Suriya 45 Director is RJ Balaji
சூர்யாவின் 44 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள நிலையில், 45-ஆவது படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கிய நிலையில், தற்போது கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.
ஆடு பகை குட்டி உறவா? தன் படத்தை எதிர்த்த தாத்தா அன்புமணி; பேத்தி படத்துக்கு உதவிய ரஜினிகாந்த்!
Music Director Changed in Suriya movie
மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் கமிட்டான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அவர், இந்த படத்திலிருந்து விலகிய நிலையில் இவருக்கு பதிலாக இளம் இசையமைப்பாளர் சாய் அபயன்கர் கமிட் ஆகியுள்ளார். இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சாய் அபயன்கர் சில ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் 'பென்ஸ்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya 45 heroine is Trisha
சூர்யாவின் 45வது படமே இவர் இரண்டாவது படமாகும். அனிருத்துக்கு போட்டியாக இளம் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள சாய் அபயன்கர் இசையை கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து கேமியோ ரோலில் நடிக்க பிரபல நடிகர் விஜய் சேதுபதியிடம், ஆர்.ஜே.பாலாஜி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுத்திகிறது.
41 வயதில் 3-வது குழந்தைக்கு தாயாக ஆசைப்படும் பிரபல நடிகை! ஏன் தெரியுமா?
Vijay Sethupathi Join Suriya 45
இந்தாண்டு வெளியான 'மகாராஜா' திரைப்படம் மூலம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்டில் இணைந்தார் விஜய் சேதுபதி. மேலும் இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் தனித்துவமானதாக இருக்கும் என்றே படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.