Chennai Rains : இன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க ஆரம்பித்த நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனத்த மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு கொஞ்சம் முன்னதாகவே தொடங்கிய நிலையில் அக்டோபர் மாத இறுதியில் பெரிய அளவில் மழை எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தமிழகத்தின் பரவலான இடங்களிலும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னையில் சில இடங்களில் கோர தாண்டவம் ஆடி இருக்கிறது என்றே கூறலாம். 

சென்னையில் அனேக இடங்களில் கன மழை தொடர்ச்சியாக நேற்று மாலை முதல் தொடங்கிய நிலையில் இப்போது மெல்ல மெல்ல அது குறைய தொடங்கி இருக்கிறது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இருந்தாலும், பல இடங்களில் உடனடியாக அந்த நீர் வடிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்று இரவு சுமார் 8 மணி அளவில் சென்னை அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கிய நிலையில் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் அது முழுமையாக கரையை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Fengal Cyclone: ஆட்டத்தை ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்! கரையை கடக்க எவ்வளவு நேரமாகும்? பரபரப்பு தகவல்!

ஃபெஞ்சல் புயல், சென்னை அருகே தரையை கடந்த பொழுது மரக்காணம் பகுதிகளில் சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் இருந்து நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி நோக்கி நகர தொடங்கி கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்கு புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும். அதே சமயம் சென்னையை பொருத்தவரை ஏற்கனவே விடுக்கப்பட்ட அதிகனத்த மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை முழுவதும் அதிகாலை வரை மிதமான மழையே இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல தமிழக வெதர்மேன் வெளியிட்ட தகவலின்படி சென்னை மக்கள் யாரும் ஏரிகள் நிரம்புவது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அவர் வெளியிட்ட தகவலின்படி செங்குன்றம் ஏறி தற்பொழுது 78% முழுமை அடைந்திருக்கிறது என்றும், இருப்பினும் அந்த ஏரி உடைய வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார். 

Scroll to load tweet…

செம்பரம்பாக்கம் 69 சதவீதம் முழுமை அடைந்திருக்கிறது என்றும், பூண்டி ஏறி 18% முழுமை அடைந்துள்ளது என்றும் வீராணம் 74% முழுமை அடைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஏரிகளில் தண்ணீர் சீரான முறையில் வெளியேறி வருவதால் மக்கள் அது குறித்த அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வெளுத்து வாங்கும் ஃபெஞ்சல்; காலை வரை செயல்பாடுகளை நிறுத்தும் சென்னை ஏர்போர்ட்!