Fengal Cyclone: ஆட்டத்தை ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்! கரையை கடக்க எவ்வளவு நேரமாகும்? பரபரப்பு தகவல்!

ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு அருகில் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3-4 மணி நேரத்தில் புயல் முழுமையாகக் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Fengal Cyclone has started to cross the coast tvk

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் இந்த புயல் புதுச்சேரிக்கு வடகிழக்கே 80 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் 50 கி.மீ. தொலைவில்  நிலைக்கொண்டுள்ளதாகவும் இன்று மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்! மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! எந்தெந்த மாவட்ட மக்களுக்கு தெரியுமா?

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இன்று காலை முதல் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையமும் மூடப்பட்டது. சுரங்க பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததது. 

இதையும் படிங்க: Half yearly Exam: அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வந்தாச்சு! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

இந்நிலையில் ஃபெஞ்சல்  எப்போது கரையை கடக்கும் எப்போது மழை ஓயும் என பொதுமக்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வானிலை மையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

அதில், ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி மாலை 5.30 மணியளவில் நிலப்பரப்பை அடைந்ததாகவும் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொடங்கியதாக தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தற்போது கடற்கரையில் இருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுவதுமாக கரையை கடக்கும். இதன் காரணமாக சென்னை உள்பட கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசி வருகிறது. புயலின் கண் பகுதி கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ தொலைவில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios