Asianet News TamilAsianet News Tamil

பொங்கலுக்கு முன்பு ரேஷன் கடை காலிபணியிடங்கள் நிரப்பப்படும்… அறிவித்தது தமிழக அரசு!!

ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

vacancies in ration shops will be filled before pongal festival says tn govt
Author
First Published Nov 8, 2022, 9:39 PM IST

ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் பொங்கலுக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதையும் படிங்க: உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது மோதிய லாரி... கோவை நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

அந்த முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களில் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க்கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33,487 கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்களில் பெறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியானது.. எவ்வாறு தெரிந்து கொள்வது ? முழு விபரம்

இதில் விற்பனையாளர் பணிக்கு 2,06,641 விண்ணப்பங்களும், உதவியாளர்  பணிக்கு  23,166 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வரும் இந்த விண்ணப்பங்கள் பெற நவம்பர் 14 ஆம் தேதியே கடைசி நாளாகும். இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios