பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்கா" என்ற பிம்பம் சிதைந்து வருவதாகக் கூறி, டெல்லி மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. இன்பதுரை ஆற்றிய உரை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து எழுப்பியுள்ள ஆவேசமான உரை, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் விவகாரத்தோடு தமிழகச் சூழலை ஒப்பிட்டு அவர் முன்வைத்த வாதங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
"பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்கா" என்ற பிம்பம் சிதைந்து வருவதாகக் கூறி, டெல்லி மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. இன்பதுரை ஆற்றிய உரை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது. மதுராந்தகம் முதல் தூத்துக்குடி வரை கடந்த பத்து நாட்களில் அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை முன்வைத்து, தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு 'நிர்பயா' உருவாவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், ''தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றும், தமிழ்நாட்டை காப்பாற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கும் அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி இன்பதுரை வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் பேசிய இன்பதுரை, ’’என் கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்போது பீதியான, அச்சமான சூழல் நிலவுகிறது. ஒரே ஒரு ஹாத்ரஸ் வழக்கு நாட்டை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், தினம் தினம் ஒரு நிர்பயா வழக்கை தமிழ்நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது அல்ல. தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கடந்த 10 தினங்களில், 3 சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
இரண்டரை வயது குழந்தை, மதுராந்தகத்தில் 14 வயது பெண், பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அந்த பெண்ணை தூக்கிச்சென்று,பாலியல் பலாத்காரம் செய்து, தெருவோரம் போட்டு விடுகிறார். சினிமாக்களில் பார்த்து இருப்பது போல் தமிழ்நாட்டில் நடக்கிறது. தூத்துக்குடியில் இரு தினங்களுக்கு முன்பாக, காவல்துறையில் புகார் அளித்தும் கூட, அதை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, இது சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்டது அல்ல. பெண்களின் மாண்பு சம்மந்தப்பட்டது. பெண்களைக் காக்கவேண்டிய கடமை இந்த அவைக்கு இருக்கிறது.

மணிப்பூரில் பெண்களுக்காக கலங்கியவர்கள், மனம் இறங்கியவர்கள் தமிழ் பெண்களுக்காக தயவு காட்ட மாட்டீர்களா..? இந்த அரசு மணிப்பூருக்கு இங்கிருந்து ஒரு குழுவை அனுப்புகிறது. ஏன் தமிழ்நாட்டிற்கு அனுப்பக்கூடாது..? மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள், நாடாளுமன்றக் குழுவை அனுப்புங்கள். அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறுகிற அநியாயங்களை, பாதுகாப்பற்ற நிலை இருப்பதை மாற்றுவதற்கு, நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹாத்ரஸ் வழக்கிலே நாடாளுமன்றம் அவ்வாறு செய்திருக்கிறது. அதுபோல் உன்னாவ் வழக்கில் உள்துறை செயலாளர் அறிக்கை பெற்று இருக்கிறார். ஏன் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அறிக்கை கேட்கவில்லை..?
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மணிப்பூருக்கு கலங்குவீர்கள், மெழுகுவர்த்தி ஏந்துவீர்கள், தமிழ் மக்களுக்கு அனுதாபம் கிடையாதா என்று கேட்கிறேன், உடனடியாக மத்திய அரசு ஒரு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

