MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கை கொடுக்காத 7 தொகுதிகள்..! காங்கிரஸுக்கு கல்தா கொடுக்கும் திமுக..! கதி கலங்க வைக்கும் சர்வே ரிப்போர்ட்..!

கை கொடுக்காத 7 தொகுதிகள்..! காங்கிரஸுக்கு கல்தா கொடுக்கும் திமுக..! கதி கலங்க வைக்கும் சர்வே ரிப்போர்ட்..!

கள யதார்த்தம் என்னவோ திமுகவின் கையில் இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இழந்த எம்.எல்.ஏ-க்களைக் கட்டிக்கொண்டு அழ திமுக தயாராக இல்லை.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 13 2026, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெற்றி தராத 'கை'யை வெட்டி எறி..!
Image Credit : Asianet News

வெற்றி தராத 'கை'யை வெட்டி எறி..!

காங்கிரஸுக்கு 'செக்' வைக்கும் அறிவாலயம்: 7 தொகுதிகளுக்கு வேட்டு! கழற்றி விடப்படுகிறாரா கை சின்னம்?

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகள் ஒருபுறம் நடந்தாலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு இந்த முறை 'அக்னிப் பரீட்சை' காத்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம். குறிப்பாக, தற்போது காங்கிரஸ் வசம் உள்ள 17 தொகுதிகளில், 7 தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் இருப்பது திமுக நடத்திய ரகசிய சர்வேயில் அம்பலமாகியுள்ளது.

25
சர்வே கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
Image Credit : Asianet News

சர்வே கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

ஆளுங்கட்சி தரப்பில் எடுக்கப்பட்ட அந்த அதிரடி சர்வேயின் முடிவுகள் சத்தியமூர்த்தி பவனையும், அறிவாலயத்தையும் ஒருசேர உலுக்கியுள்ளன. ஊட்டி, விருத்தாசலம், அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 7 தொகுதிகளில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு 'பூஜ்ஜியம்' என்ற அளவிலேயே இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

வளர்ச்சிப் பணிகள் முடக்கம், தொகுதி மக்களுடனான தொடர்பு துண்டிப்பு, கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை என அடுக்கடுக்கான புகார்கள் இந்த சர்வேயில் பட்டியலிடப்பட்டுள்ளன. "வெற்றி வாய்ப்பு இல்லாத குதிரை மீது பந்தயம் கட்ட திமுக தயாராக இல்லை" என்பதுதான் அறிவாலயம் காங்கிரஸுக்கு சொல்லாமல் சொல்லும் செய்தி.

Related Articles

Related image1
ராமதாஸ் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்.. அன்புமணிக்கு சிக்கல்?
35
தொகுதிகளைப் பறிக்கும் திமுக
Image Credit : x

தொகுதிகளைப் பறிக்கும் திமுக

கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18-ல் வென்ற காங்கிரஸ், இன்று இடைத்தேர்தல் இழப்புக்குப் பின் 17 எம்.எல்.ஏ-க்களுடன் நிற்கிறது. வரும் தேர்தலில் 28 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்தாலும், "இந்த 7 சவாலான தொகுதிகளை எங்களிடமே கொடுத்துவிடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என திமுக கறாராகக் கூறிவிட்டது.

அதாவது, காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி அலை வீசும் இடங்களில் திமுக தனது சொந்த வேட்பாளர்களைக் களமிறக்கி, வெற்றியைத் தன்வசப்படுத்தத் துடிக்கிறது. "உங்களுக்கு வேறு தொகுதிகளைத் தருகிறோம், இதைக் கேட்காதீர்கள்" என்று காங்கிரஸுக்கு திமுக தலைமை 'அட்வைஸ்' என்ற பெயரில் நெருக்கடி கொடுத்து வருகிறது.

45
உட்கட்சி பூசல்
Image Credit : Asianet News

உட்கட்சி பூசல்

ஒருபுறம் திமுகவின் அழுத்தம் என்றால், மறுபுறம் காங்கிரஸின் 'சாபக்கேடான' கோஷ்டி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் பணிக் குழு தங்களைப் புறக்கணிப்பதாக முன்னாள் தலைவர்கள் முகுல் வாஸ்னிக்கிடம் புகார் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். "சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கே சீட் கொடுத்தால் அதிமுக சுலபமாக ஜெயித்துவிடும்" என சொந்தக் கட்சி நிர்வாகிகளே போட்டுக்கொடுக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

தற்போதுள்ள 17 தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது தக்கவைக்க தமிழக காங்கிரஸ் போராடி வருகிறது. ஆனால், திமுகவோ "வெல்லும் தொகுதிகளை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், மற்றவற்றை எங்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்குங்கள்" எனத் தெளிவாக காய் நகர்த்துகிறது.

55
திமுகவின் கையில் முடிவு
Image Credit : our own

திமுகவின் கையில் முடிவு

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கருக்கு டெல்லி விடுத்த தகவல், கோஷ்டி தலைவர்களின் பரிந்துரைகளைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மாநிலத் தலைமை. ஆனால், கள யதார்த்தம் என்னவோ திமுகவின் கையில் இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இழந்த எம்.எல்.ஏ-க்களைக் கட்டிக்கொண்டு அழ திமுக தயாராக இல்லை.

அதிமுக வலுவாக இருக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தால், அது ஒட்டுமொத்தக் கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால், இந்தத் 'தொகுதி மாற்றம்' நிச்சயம் நடக்கும் என்றே தெரிகிறது. காங்கிரஸின் 7 தொகுதிகள் திமுக கைக்கு மாறுவது உறுதியானால், அது தமிழக காங்கிரஸுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகவே அமையும்.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
நாளை முதல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Recommended image2
ராமதாஸ் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்.. அன்புமணிக்கு சிக்கல்?
Recommended image3
கோவை மக்களுக்கு நல்ல செய்தி..! ரியல் எஸ்டேட் வளருது.. பாலக்காடு ரோட்டில் நிலத்தை வாங்கிப்போடுங்க
Related Stories
Recommended image1
ராமதாஸ் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்.. அன்புமணிக்கு சிக்கல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved