ராமதாஸ் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்.. அன்புமணிக்கு சிக்கல்?
Ramadoss: கட்சியின் பொதுச்செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறது என்பது இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துள்ள அன்புமணி தான் தலைவர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போது வரை பாமகவில் தலைவராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்துவிட்டு தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றத்தை நாடா ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம், அன்புமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்து இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ராமதாஸ்-க்கு 87 வயதாகவிட்டதால் உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக கட்சியின் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி ராமதாஸை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். பாமக தலைவர் என ராமதாஸ் தன்னை அறிவித்துக்கொண்டது சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை மற்றும் வழங்காட்டுதல் மட்டுமே ராமதாஸ் செய்ய முடியும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது பாமக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு அன்புமணியின் மோசமாக செயல்பாடுகள் தான் காரணம். தற்போது அவர் கட்சி உறுப்பினர் கூட கிடையாது என ராமதாஸ் கூறியிருந்தார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு விசாரணையை 13ம் தேதிக்கு அதாவது இன்று ஒத்திவைத்தார். இந்நிலையில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கட்சியின் பொதுச்செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதனை வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் வழக்கு விசாரணையை உரிமையியல் நீதிமன்றம் விதிக்கப்பட்ட இடைக்கால தடை விதித்துள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்துள்ளார். தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்ததை மறைத்துள்ளனர். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு வைத்த கோரிக்கையை ஏற்று வரும் 16ம் தேதி திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.

