MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Annamalai: என் போட்டோ, பெயரை பயன்படுத்தாதீங்க.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.. என்னாச்சு?

Annamalai: என் போட்டோ, பெயரை பயன்படுத்தாதீங்க.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.. என்னாச்சு?

Annamalai: சில இயக்கங்கள் தனது பெயர், போட்டோவை பயன்படுத்தக்கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை தொடங்கிய இயக்கத்துக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது.

2 Min read
Author : Rayar A
Published : Jun 08 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அண்ணாமலை இயக்கத்துக்கு பெருகும் ஆதரவு
Image Credit : Facebook

அண்ணாமலை இயக்கத்துக்கு பெருகும் ஆதரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகினார். தனி இயக்கத்தை தொடங்கிய அவர் இதனை அரசியல் கட்சியாக மாற்றப் போவதாகவும் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில், சில இயக்கங்கள் தன்னுடைய படம் மற்றும் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஒருமாத காலம் உறுப்பினர் சேர்க்கை
Image Credit : X

ஒருமாத காலம் உறுப்பினர் சேர்க்கை

இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.

இது முறையான செயல் அல்ல‌

இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.

33
எனது பெயர், போட்டோ பயன்படுத்தக்கூடாது
Image Credit : X

எனது பெயர், போட்டோ பயன்படுத்தக்கூடாது

ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அண்ணாமலை பாஜக
தமிழ்நாடு
அரசியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vehicle Auction: வெறும் ரூ.2,000 முன்பணம்! பைக், கார் வாங்க அரிய வாய்ப்பு! தமிழ்நாட்டில் எங்க தெரியுமா?
Recommended image2
Public Exam Time Table : 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் நடைபெறுகிறது? முழு விவரம்!
Recommended image3
Now Playing
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !
Related Stories
Recommended image1
Annamalai: புதிய அரசியல் கட்சி.. அடுத்த தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
Recommended image2
Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved