கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழப்பு… வெளியானது பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர் மீது வேகமாக மோதியது. இதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டதோடு அவரது பைக் பல மீட்டர் தூரம் இழுத்துசெல்லப்பட்டது.
இதையும் படிங்க: பொங்கலுக்கு முன்பு ரேஷன் கடை காலிபணியிடங்கள் நிரப்பப்படும்… அறிவித்தது தமிழக அரசு!!
இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இளைஞர் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததொடு காரை வேகமாக ஓட்டி வந்த வெங்கடேசன் என்பவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது.
இதையும் படிங்க: உயர கட்டுப்பாட்டு இரும்புத்தூண் மீது மோதிய லாரி... கோவை நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
இளைஞர் யூ-டர்ன் செய்ததால் வேகமாக வந்த காரை அவர் கவனிக்கவில்லை. மேலும் இளைஞர் ஹெல்மெட் அணியவில்லை என்றும் தெரிவித்தார். இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், பைக்கில் வந்தவர் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என அடையாளம் காண்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட கார் டிரைவர் வெங்கடேசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் புதுச்சேரியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.