T.Balamurukan
திமுக முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வீச்சு, பட்டப்பகலில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் நடந்த, இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, மாநகர் மாவட்ட முன்னாள் திமுக செயலரும், எம்எல்ஏ வுமாகவும் இருந்தவர் வி.வேலுச்சாமி. தற்போது, இவர் திமுக வில் பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். கேகே. நகரில் பகுதியில் வசித்தார். கடந்த ஓராண்டு முன்பு, இருந்து அண்ணா நகர் முதல் கிழக்கு குறுக்குத் தெருவில் வசிக்கிறார். இவருடன் மருத்துவர்களான மகள், மருமகன் வசிக்கின்றனர். மருமகன் கேகே. நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். நேற்று மதியம் வேலுச்சாமி, அவரது மனைவி ராஜாத்தி, மருமகன் சுரேஷ், பேத்தி ஆகியோர் இருந்தனர். வீட்டு வாசலுக்கு பக்கத்தில் அவரது காரும், இரும்புக் கேட்டுக்கு வெளியில் மருமகனின் காரும் நிறுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் மதியம் 2.20 மணிக்கு வாசல் பகுதியில் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ராஜாத்தி இது பற்றி கணவர் வேலுச்சாமியிடம் தெரிவித்தார். உடனே அவர் வெளியே வந்தார். சுமார் 7 அடி உயரமுள்ள இரும்பு வெளி கேட்டுக்கு அருகில் தரையில் வெடிகுண்டு வெடித்து சிதறி இருப்பது தெரிந்தது கண்டு வேலுச்சாமி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவ்விடத்தில் பேட்டரி, வயர்கள், வெடிபொருட்கள் சிதறிக் கிடந்தன. இது பற்றி அண்ணாநகர் காவல் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

 இதைத்தொடர்ந்து காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை காவல் ஆணையர் கார்த்திக், அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லல்லி கிரேஸ்,காவல் ஆய்வாளர் ரமணி உள்ளிட் டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெடிகுண்டு தடுப்புபிரிவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் அப்பிரிவினர் அங்கு சென்றனர். சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த வயர், பேட்டரி உள்ளிட்ட வெடிப்பொருட்களை சேகரித்தனர். மோப்ப நாய் அங்கு வந்தது. வீட்டு வாசலில் இருந்து 80 அடி மெயின் ரோடு வரை ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. வேலுச்சாமியிடம் காவல் ஆணையர், துணை ஆணையர் விசாரித்தனர். இதை யடுத்து, அவர் அணணாநகர் காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் அளித்தார். முதல்கட்ட விசாரணையில்,  இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது வீட்டு வாசலில் வெடி குண்டை வீசி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். 

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: 
முன்னாள் எம்எல்ஏ வீட்டுக்கு வாசலில் குண்டு வெடித்தது தெரடர்பாக பல்வேறு கோணத்தில் விசாரிக்கிறோம். அவரது வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை என்றாலும், அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருந்த சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்துள்ளோம். இருவர் வேலுச்சாமியின் வீட்டு வாசல் பகுதிக்கு வந்துவிட்டு செல்வது தெரிகிறது. மேற்கு நோக்கிச் செல்லும் அவர்கள் சிறிது தூரம் சென்றபின், திரும்பி பார்த்துவிட்டு, பைக்கில் விரைவாக செல்கின்றனர். அவர்கள் நடமாடும் துரித உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் அணிந்து இருக்கும் சீருடை அணிந்துள்ளனர்.  இந்த சீருடை போர்வையில்  யாரோ வேலுச்சாமியின் வீட்டுக்குள் வெடிகுண்டு வீசியிருக்க லாம். சம்பவ இடத்தில் கைப்பற்றிய பேட்டரி, வயர்களை வெடிப் பொருட்களை வைத்து பார்க்கும்போது, திட்டமிட்டு தயாரிக்கப் பட்ட குண்டு மாதிரி தெரிகிறது. அவர்கள் வாசல் போட்டுவிட்டு, சிறிது தூரத்தில் இருந்து ரிமோட் வாயிலாக வெடிக்கச் செய்தி ருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும், ரிமோட் மூலம் வெடிக்கச் செய்திருப்பதால் இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கிறோம். அவர் திமுகவில் எம்எல்ஏ உட்பட பல்வேறு கட்சி பொறுப்புகளில் இருந்துள்ளார். வழக்கறிஞராகவும் இருந்தவர். இது போன்ற சூழலில் அவருக்கு அரசியல் ரீதியாகவும், உறவினர்களுக்குள் ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா என்ற கோணங்களிலும்  விசாரிக்கிறோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து விடுவோம், என்றனர். 

வேலுச்சாமி கூறுகையில், நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது, மருமகன் மருத்துவமனையில் இருந்து வந்த 10 வது நிமிடத்தில்  2.20 மணிக்கு பயங்கரம் சத்தம் கேட்டது. வீட்டு மரக்கதவை திறந்து வெளியே சென்று பார்த்தபோது, இரும்புக் கேட்டுக்கு அருகில் குண்டுவெடித்து, வெடிபொருட்கள் சிதறி கிடப்பது தெரிந்தது. திட்டமிட்டு தயாரித்து கொண்டு வந்து வீசிய குண்டு போல் தெரிகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்து வீசிவிட்டு சென்றிருப்பதாக அக்கம், பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் துரித உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் போன்று சீருடை அணிந்து இருப்பதாக கூறுகின்றனர். மருமகன் கார் வாசலில் நின்றதால் அவர்களால் உள்ளே நேரடியாக வரமுடியவில்லை. எனக்கு அரசியல், கட்சி, உறவினர்கள், நண்பர்கள் என, யார்  மத்தியில் எந்த பகையுமில்லை. பதவி இருந்தாலும், சரி, இல்லாவிடினும் எப்போதும் போலவே கட்சி பணியாற்றுகிறேன். மிரட்டவேண்டும் என்ற நோக்கில் செய்திருந்தாலும், நான் பயப் படபோவதில்லை. காவல்துறையில் நடந்த விவரம் குறித்து புகாராக அளித்துள்ளேன். துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.