Asianet News TamilAsianet News Tamil

பாலியல் புகாரில் சிக்கிய பிரிட்ஜ் பூஷனுக்குப் பதில் அவரது மகனுக்கு சீட் கொடுத்த பாஜக!

பாஜக பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்குப்  பதிலாக அவரது மகனைத் தேர்வு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமை தன்னிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்படி, தற்போது உத்தரபிரதேச மல்யுத்த அமைப்பின் தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷனின் இளைய மகன் கரண் பூஷன் சிங் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

BJP Drops Brij Bhushan Amid Sexual Harassment Charge, Fields His Son sgb
Author
First Published May 2, 2024, 5:58 PM IST

பாஜக எம்பியும் முன்னாள் மல்யுத்த தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் அவரது மகன் கரண் பூஷன் சிங் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், காங்கிரஸின் கோட்டையான ரேபரேலியில் பாஜக வேட்பாளராக பிரதாப் சிங் நிறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற இந்தத் தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆறு முறை எம்.பி.யாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைக் கூறி போராட்டம் நடத்தினர். இதனால் அவருக்கு இருந்த செல்வாக்கு மிகவும் அடிவாங்கி இருக்கிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உ.பி. மாநிலத்தில் அவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்தி தேர்தலில் வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட வேண்டாம் என்று பாஜக முடிவு செய்துள்ளது.

ஆனால், பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்குப்  பதிலாக அவரது மகனைத் தேர்வு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமை தன்னிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்படி, தற்போது உத்தரபிரதேச மல்யுத்த அமைப்பின் தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷனின் இளைய மகன் கரண் பூஷன் சிங் கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரிஜ் பூஷனின் மூத்த மகன் பிரதிக் பூஷன் சிங் ஏற்கெனவே உ.பி.யில் எம்எல்ஏவாக உள்ளார். கரண் பூஷன் சிங் போட்டியிடும் கைசர்கஞ்ச் தொகுதியில் மே 20ஆம் தேதி ஐந்தாவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து, பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஒரு மாதத்திற்கு மேல் போராட்டம் நடத்தினர். இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. அவர் மீதான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios