Asianet News TamilAsianet News Tamil

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராவில் குளறுபடி? ராதாகிருஷ்ணன் அதிரடி ஆய்வு

சென்னையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

election officer radhakrishnan inspect vote counting places in chennai vel
Author
First Published Apr 29, 2024, 4:46 PM IST

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ராணி மேரி கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் இராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், வட சென்னை தேர்தல் பொறுப்பாளர் ரவி தேஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை இராதாகிருஷ்ணன், வாக்கு எண்ணும் மையங்களை இன்று ஆணையருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலராக கூட்டாக ஆய்வு செய்தோம்.

யாராக இருந்தாலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்குள் செல்ல முடியாது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 மேசைகள் அமைத்து வாக்கு என்னவும் 16 கேமராக்கள் பாதுகாப்பிற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளும் அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மனைவி சௌமியாவுடன் அன்புமணி சிறப்பு வழிபாடு

கண்காணிப்பு கேமராக்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்தோம். வடசென்னை தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு அறைகளை கண்காணிக்க 104 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய தடையில்லா மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு தற்கொலை; தமிழக அரசு எப்போது தான் விழிக்கும்? அன்புமணி காட்டம்

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்த போது, வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 140 அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் சரியாக இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்து எங்களுக்கு அறிக்கை கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு கொடுப்போம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios