- Home
- உடல்நலம்
- Walking : வாக்கிங் போறப்ப இதை மறந்துடாதீங்க... வாரத்தில் 2 முறை 'இப்படி' நடந்தாலும் ஏராள நன்மைகள்
Walking : வாக்கிங் போறப்ப இதை மறந்துடாதீங்க... வாரத்தில் 2 முறை 'இப்படி' நடந்தாலும் ஏராள நன்மைகள்
தினமும் வாக்கிங் செல்பவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களாவது இந்த மாதிரி நடக்கும் பழக்கத்தை வைத்திருந்தால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.

வாக்கிங் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை செய்யக் கூடிய அற்புதமான பயிற்சியாகும். இது ஒரு மிதமான கார்டியோ பயிற்சி. இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு பல நாள்பட்ட நோய்களையும் குறைக்க உதவுகிறது. வாக்கிங் செல்லும்போது காலுக்கு கட்டாயம் ஷூ அணிய வேண்டும். ஏனென்றால் ஷூ அணிந்து நடப்பது தேவையில்லாத காயங்களை தவிர்க்கும். மூட்டுகள், பாதங்களில் வலி ஏற்படாமல் இருக்கும். ஆனால் வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்கள் புல்வெளியில் அல்லது சமதளமான நல்ல மண் தரையில் வெறுங்காலுடன் நடந்து பாருங்கள். நீங்கள் நினைத்து பார்க்காத நன்மைகள் கிடைக்கும்.
உள்ளங்கால்களில் முக்கிய அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. இந்தப் புள்ளிகள் உடலின் உள்ள முக்கிய உறுப்புகள், நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டவை. இவை வெறுங்காலில் நடக்கும்போது தரையில்பட்டு தூண்டப்படும். இந்த இயற்கையான அழுத்தம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தப்படுத்திவிடும். இதனால் மன அழுத்தம் குறைகிறது.
வெறுங்காலில் நடந்தால் செரிமான அமைப்பு மேம்படும். சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உள்ளுறுப்புகளின் செயல்பாடும் மேம்படுகிறது. வெறுங்காலில் நடப்பது முழு உடலையும் சமநிலை செய்கிறது. நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் புல்வெளியில் நடந்தால் உடல் நிதானமடையும்.
ஈரமான புல்வெளியில் வெறுங்காலில் நடப்பது இயற்கையான சிகிச்சை எனலாம். நம் உடலில் உள்ள ஆற்றல் தரைவழியாக கடத்தப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. உடலில் இருந்து அதிகமான மின் சக்தி வெளியாகும்போது மனம் அமைதியாகும். தூக்கத்தின் தரம் மேம்படுவதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
பலருக்கும் குதிகால் வலி, வீங்கிய பாதங்களுடன் அவதிப்படுகிறார்கள். அவர்கள் வெறுங்காலுடன் நடந்தால் உள்ளங்கால்களில் இருக்கும் நரம்பு புள்ளிகளில் அழுத்தம் ஏற்படும். இதனால் இரத்த ஓட்டத்தை மேம்பட்டு வீக்கம் குறையும். கால்களில் உள்ள எலும்புகள், தசைகள் வலுவடைய உதவும். தொடர்ந்து இப்படி நடந்தால் குதிகால் வலி மாயமாக மறையும்.
காலை அல்லது மாலையில் புல்வெளியில் நடக்கலாம். ஆயுர்வேதம் இந்த நேரத்தில் நடப்பதை தான் பரிந்துரைக்கிறது. நாள்தோறும் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் இப்படி நடந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.