தினமும் 10,000 காலடிகள் நடப்பதை எப்படி எளிமையாக கடைபிடிக்கலாம் என இங்கு காணலாம்.

சில நாட்களில் நீங்கள் இலக்கை கவனிக்காமல் எளிதாகக் கடக்கிறீர்கள், மற்ற நாட்களில் நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது உங்கள் டிராக்கரைப் பார்க்கும்போது சோகமாக 3,200 அடிகள் பின்னோக்கிப் பார்ப்பீர்கள்.

நாள்தோறும் நடைபயிற்சிக்கு செல்வது அவசியம். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். நாள்பட்ட நோய்கள் அபாயத்தைக் குறைக்கும். எடை கட்டுப்பாடு, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, இதயத்தை வலுப்படுத்த, இதய நோய்களை தடுக்க, பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க என பல நோய்களைத் தடுக்க நடைபயிற்சி உதவுகிறது.

இப்படி பல நன்மைகள் செய்யும் நடைபயிற்சியை தினமும் கடைபிடிக்க பலரால் முடிவதில்லை. நிலைத்தன்மை இல்லாமல் எந்த விஷயம் செய்தாலும் அதில் முழுபலன்கள் இல்லை. நடைபயிற்சியை வாழ்வின் இயல்பான ஒரு விஷயமாக மாற்ற சிறிய பழக்கவழக்கங்களை எப்படி உருவாக்க வேண்டும்? 10,000 காலடிகள் இலக்கை எப்படி அடைய வேண்டும் என இங்கு காணலாம்.

ஆர்வத்தை 'இப்படி' தூண்டுங்க!

நீங்கள் நடைபயிற்சி செல்வதை தண்டனையாக நினைத்தால் அது கடினமாக தெரியும். அதை ஜாலியாக செய்ய வேண்டும். நடைபயிற்சி செல்ல சரியான இடத்தை தேர்ந்தெடுங்கள். வீட்டு மாடி, அருகில் உள்ள விளையாட்டு மைதானம், பார்க் என ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். நடைபயிற்சி செல்லும்போது சுவாரசியமான விஷயங்களை புகைப்படங்கள் எடுத்து மகிழுங்கள். பாட்டு, தத்துவங்கள், கதைகள், ஆடியோ புத்தகங்கள் என ஏதேனும் கேட்டுக் கொண்டே நடக்கலாம். இப்படி நடப்பதை சுவாரசியமாக மாற்றினால் தினமு நடக்க இயல்பாகவே ஆர்வம் வரும்.

வீட்டு வேலைகள்

வீட்டு வேலைகள் செய்யும் பெண்கள் ஆண்களை விட அதிக நாட்கள் வாழ்வதாக exercised என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார். ஏனென்றால் வீட்டு வேலை செய்யும் பெண்கள் நாள் முழுக்க இயக்கி கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நாள் முழுவதும் அமர்ந்திருப்பதை காட்டிலும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும். வீட்டை பெருக்குவது, துடைப்பது, மாடிப்படிகளை பெருக்குவது, தோட்டத்தை பாராமரிப்பது என நடைபயிற்சியுடன் தொடர்புடைய வேலைகள் பல உள்ளன. இதை செய்வது நல்லது.

ஈஸி டாஸ்க்

சில நாட்களில் பயங்கர பிஸியாக இருப்பீர்கள். தனியாக இருக்க ஒரு நிமிடம் கூட இருக்காது. அப்போது குறுநடை போடலாம். நேரம் கிடைக்கும்போது ஐந்து நிமிடங்கள் இங்கும் அங்கும் நடந்தால் போதும். காபி போடும்போது நடக்கலாம். குடிக்க தண்ணீர் எடுக்க செல்லாம். சோசியல் மீடியாவில் ஸ்க்ரோல் செய்யும்போது வீட்டிற்குள்ளாக நடக்கலாம். எப்போதுமே வெளியில் சென்று தான் நடக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே சில காலடிகளை நடக்க முயற்சி செய்யலாம்.

எது இலக்கு?

நடைப்பயிற்சிக்கான தனியாக நேரம் ஒதுக்கி நடப்பது மட்டுமே பயிற்சி அல்ல; அது தவிரவும் நடக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள கடைக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்வது, லிப்ட் பயன்படுத்தாமல் படிகளில் ஏறி செல்வது, தொலைபேசியை பயன்படுத்தும் போது நடந்து கொண்டு பேசுவது என உங்களுடைய அன்றாட செயல்களை நடப்பதையும் இணைத்துக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

தினமும் பத்தாயிரம் காலஅடிகள் நடந்தே தீர வேண்டும் என உங்களை நீங்களே கொடுமைபடுத்த வேண்டாம். உங்களுடைய உடல் சோர்வடையும் நிலையில் இருந்தால் அதை ஓய்வெடுக்க அனுமதியுங்கள். தினமும் 10 ஆயிரம் காலடிகள் இலக்கை எட்ட வேண்டும் என்பது இல்லை. ஒரு சில நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். நீண்ட கால வெற்றி என்பது உங்களுடைய நிலைத்தன்மையில் தான் இருக்கிறது. இரண்டு நாட்கள் நடந்து விட்டு அதை கை விடுவதை விட தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது சிறந்தது.

நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பத்தாயிரம் காலடிகள் சிறந்த பலன் அளிக்கும். ஆனால் அதை ஒரே மூச்சில் நடக்க வேண்டும் என்பது கிடையாது. படிப்படியாக உங்களுடைய காலடிகளை அதிகரிக்கலாம். வீட்டு வேலைகள் செய்யும்போது பொழுதுபோக்கின் சமயங்களில் நடந்து கொண்டே அதனை செய்வதற்கு முயற்சி செய்யலாம்.

தினமும் பத்தாயிரம் காலடிகள் நடப்பது என்பது முதலில் கடினமாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய மனநிலையும் ஆர்வமும் அதை நாளடைவில் சாத்தியப்படுத்தும். ஆரம்ப காலத்தில் பொறுமையாக நடைபயிற்சியை தொடங்கி நாளடைவில் 10 ஆயிரம் காலடிகள் இலக்கை அடையலாம்.

இவ்ளோ ஈஸியா 10,000 காலடிகலா?

நீங்கள் நடப்பதற்கு புதியவராக இருந்தால் முதல் நாளிலேயே பத்தாயிரம் காலடிகள் இலக்கை அடைய வேண்டும் என நினைக்க வேண்டாம். இது உங்களை சோர்வடைய செய்யும். முதலில் ஒரு வாரத்திற்குள் பத்தாயிரம் காலடிகள் நடந்து முடிப்பதாக முடிவு செய்யுங்கள். ஒரு நாளுக்கு 2000 காலடிகள் என வாரத்தில் ஐந்து நாட்களில் பத்தாயிரம் கால அடிகள் இலக்கை நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த வாரத்தில் இந்த இலக்கை சற்று அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு 12 ஆயிரம் காலடிகள் என முயற்சி செய்யுங்கள். இப்படி படிப்படியாக உங்களுடைய காலடிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு நாளைக்கு பத்தாயிரம் காலடிகள் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள் இது உங்களை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சிறந்த வழியாக இருக்கும்.